இந்தியா

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்.! நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ.!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்கமுயன்றபோது நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் பெண் ஒருவர்  ரயில் தண்டவாளத்தை கடக்கமுயன்றபோது நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் ரோஹ்தக்கில் ரயில் பாதையை பெண் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ரயில் வந்ததால், கொஞ்சம் கூட பதட்டப்படாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென கீழே படுத்து அந்த பெண் தனது உயிரைக் காப்பாற்றினார். 

அந்தப் பெண் ரயிலின் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சரக்கு ரயில் சிக்னலுக்காக காத்திருந்தது. திடீரென சிக்னல் கிடைத்ததால் ரயில் திடீரென நகரத் தொடங்கியபோது அவர் ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளார். இதனைப்பார்த்த அங்கிருந்த மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதனையடுத்து ரயிலின் எல்லா பெட்டிகளும் கடந்து செல்லும் வரை அந்தப் பெண் ரயிலுக்கு அடியே அப்படியே கிடந்துள்ளார். ரயில் சென்ற பிறகு அந்த பெண் சிறிதளவும் காயமில்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee