துருக்கி நாட்டில் சேர்ந்தகள் தம்பதி அய்சல் -செம்ரா.... மனைவி செம்ரா கருவுற்றிருந்த நிலையில் அவரை மகிழ்ச்சியாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் அவர் தனது மனைவியை துருக்கியில் உள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபல சுற்றுலாத் தலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் மலையின் விளிப்பு பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளனர். அதன் பின்னர் திடீரென கர்ப்பிணி மனைவி செம்ரா கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவரது உடலை கூட மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. அதாவது அய்சல் தனது கர்ப்பிணி மனைவியை கிழே தள்ளி கொன்றது அம்பலமானது.
அதாவது, மனைவியின் பெயரில் இருக்கும் காப்பீட்டு தொகையை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவே இந்த கொடூஞ்செயலை செய்துள்ளார்.
ஆனால் இந்த விவரம் போலீசில் புகார் ஆனதால் காப்பீட்டு நிறுவனம் எந்த தொகையும் வழங்க மறுத்துள்ளது. இவ்வாறு பணத்திற்காக தனது 7 மாத கர்ப்பிணியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது