உலகம்

நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன??

இலங்கை நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு:-

இலங்கை நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் பயணமாக வருகிற பிப். 22-ம் தேதி இலங்கைக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

மேலும் பிப். 22ம் தேதி இம்ரான்கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் இம்ரான்கான் உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்றத்துக்கு இம்ரான்கான் வருகை தரும் நிகழ்ச்சி நடைபெறாது என்று வெளியுறவு துறை அமைச்சர் குணவர்த்தன, அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கொழும்பு கெஸ்ட் வலை தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனாவை தொடர்ந்து கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு உரையை ரத்து செய்யுமாறு சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன கோரியதாக வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, கொரோனாவை தொடர்ந்து கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டே அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டாலும், இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப வாய்ப்புள்ளதால் அவரது உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு முறையிட தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee