தமிழ்நாடு

பேய் கடிக்கு அம்மா மினி கிளினிக்கில் மருந்து கிடைக்கும்- திகிலை கிளப்பிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!!!

பாம்பு கடிக்கு மட்டுமில்லை, பேய் கடிக்கும் மருந்து உண்டு" என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு:-

அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் பாம்பு கடி, நாய் கடி, பேய் கடி என எல்லா கடிக்கும் அம்மா மினி கிளினிக்கில் மருந்து கிடைக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசி கலகலப்பூட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டரை, கடலூர், கொடூர் பெரும்பாக்கம் ஆகிய 4 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்தார். பெரும்பாக்கத்தில் பேசிய அமைச்சர், ஒரு ஊருக்கு பள்ளிக்கூடம், கோவில் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் மருத்துவமனை இருக்க வேண்டியதும் மிகமிக அவசியமானது என்று தெரிவித்தார்.

அவ்வகையில் இங்கு அமையப்பெற்றுள்ள மினி கிளினிக்குகளில் பாம்பு கடி, நாய் கடி, பேய் கடி என அனைத்து கடிகளுக்கும் மருந்துள்ளதாக தெரிவித்தது அங்கு கூடியிருந்த மக்களிடையே சிரிப்பலையை உண்டாக்கியது. ஆமா, பேய் கடி இருக்கா என்ன? என்று பொதுமக்களை பார்த்து அமைச்சர் கேட்டார்.

பின்னர் ஒரு ஃபிளோவில் சொல்லிவிட்டதாக கூறி அமைச்சர் பாண்டியராஜன் பேச்சை தொடர்ந்தார். அம்மா மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், துணை மருத்துவர், செவிலியர், உதவியாளர் என 4 பேர் இருப்பார்கள் என்றும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee