தொழில்நுட்பம்

200 கப்பல்கள் சிக்கிக்கொண்டுள்ளது 350 உயர வாய்ப்புள்ளது !!

இந்திய அரசாங்கம் நிலைமையைச் சமாளிக்க நான்கு அம்சத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. தளவாடங்கள் பிரிவு,வர்த்தகம் ,கப்பல் மற்றும் நீர்வழித்த துறை நடத்திய கூட்டத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது கால்வாயின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் 200 கப்பல்கள் சிக்கியுள்ளன,அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை 350 ஆக உயர வாய்ப்புள்ளது.

இந்தியா :
கடந்த 23 -ஆம் தேதி சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கிக்கொண்டதால் பல கடல்வழி வணிகங்கள் முடங்கி போன நிலையில் .இதனால் நூற்றுக்கணக்கான கோடி இழப்புகள் இருக்கக்கூடும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது .இந்த பாதையானது  வட அமெரிக்கா,தென்  அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து  200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி இறக்குமதி பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .இதில் பெட்ரோலிய பொருட்கள்,கரிமஇரசாயனங்கள்,ஆட்டோமொபைல்,இயந்திரங்கள்,ஜவுளி மற்றும் பல பொருட்கள் ,வர்த்தக அமைச்சகத்தின் நான்கு அம்ச திட்டத்தை உள்ளடக்கியது.

1.எளிதில் அழிந்துவிடக்கூடிய சரக்குகளை கண்டறிந்து அதனை முதலில் கப்பல்வழியாக இயக்க வேண்டும் .

2. தற்போதுள்ள ஒப்பந்தங்களின்படி சரக்கு விகிதங்கள் மாறாமல் அப்படியே இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் சேனல்களைச் செயல்படுத்துகிறது .

3. நெருக்கடி காலங்களில் சரக்கு விகிதங்களில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துமாறு கப்பல் வழித்தடங்களுக்கு அரசாங்கம் கோரிக்கைகளை விடுத்து வருகிறது .

4.கேப்  ஆஃப் குட் ஹேப் வழியாக கப்பல்களை மீண்டும் வழிநடத்தும் பற்றி அரசாங்கம் ஆராயவேண்டும் . சூயஸுடான்  ஒப்பிடும்போது,கேப் பாதை வழக்கமாக 15 கூடுத்தாள் நாட்கள் எடுக்கும் என குறிப்பிடதக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate