திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் அதிகளவிலான தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழ்நாடு,கேரளா மற்றும் பல பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வாங்கி செல்வார்கள்,தற்போது தமிழகத்திலும் மற்ற பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் போதுமான அளவு உள்ளதால் உடுமலை சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் பெரும்பாலும் வராத காரணத்தினாலும் ,தக்காளியின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாலும் உடுமலை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.14 கிலோ எடை உள்ள தக்காளிகள் ரூபாய் 20 முதல் ரூபாய் 40 வரையே விற்பனையாவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
உடுமலையில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் ,சந்தைகளில் தக்காளியின் வரத்து மிகவும் அதிகரித்து உள்ளது,தக்காளி விலைகள் குறைந்தாலும் அதனை சந்தைக்கு கொண்டுவரும் விலை குறையவில்லை எனவே சில விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலே விட்டு விடுகின்றனர் மற்றும் சிலர் செடிகள் வீணாகிவிடும் என எண்ணி தக்காளிகளை பறித்து தெருக்களில் கொடுக்குகிறார்கள்.பெரும்பாலும் விவசாயிகள் தக்காளி தோட்டங்களை அளிக்கவும் தயாராகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.