பாகிஸ்தான்:
இந்தியாவில் இருந்து சர்க்கரையை பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்ய தடை விதித்து வந்த பாகிஸ்தான் அரசு 2 வருடங்களுக்கு பிறகு தற்போது தடையை நீக்கியுள்ளது.இதனை பற்றி பாகிஸ்தான் நிதியமைச்சர் ஹம்மத் அசார் கூறுகையில் "உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து 5 லட்சம் டன் வெள்ளை சர்க்கரை இறக்குமதி செய்யப்படும் மற்றும் வரும் ஜூன் மாத இறுதிக்குள் பருத்தி இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டத் தடையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் " தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது,ஒரு கிலோ சர்க்கரை பாகிஸ்தான் ரூபாய் 100- ரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே வெள்ளைச் சர்க்கரையின் விலை பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவு என்பதாலும் 2 ஆண்டுகளாக இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் இடையே கடந்த மாதம் கடிதப் பரிமாற்றம் மற்றும் கடந்த பிப்ரவரியில் ஒரு புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் போன்ற இரு காரணங்களால் இரு நாடுகளிடையே உறவுகளில் ஒரு இணக்கம் ஏற்பட்டதால் தன இந்த தடை நீங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.