கல்வி & வேலைவாய்ப்ப

மாணவிகளுக்கு 25 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு !!

ஆப்கானிஸ்தானில் சிறுமிகளின் முதல்நிலை மற்றும் இடைநிலை கல்வியை மேன்மைப்படுத்த 25 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்வதாக உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

 காபுல் :
ஆப்கனிஸ்தானில் போதுமான வசதி இல்லாத காரணத்தினால் அங்குள்ள பிள்ளைகளுக்கு  கல்வி கற்பது பெரும் சவாலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உலக வங்கி 25 மில்லியன் டாலரை கல்வி செலவிற்காக வழங்கவுள்ளது.இந்த மானியம் கிட்டத்தட்ட 100 கூடுதலான  பள்ளிகளை கட்டுவதற்கும்,சிறுமிகளின் கல்வியை மேம்படுத்துவதற்கும்,ஆசிரியர்களின் பயிற்சிக்கு ஆதரவளிப்பதற்கும்,சமூக அடிப்படையிலான கல்வியை மேம்படுத்துவதற்கும் உதவும் என குறிப்பிடத்தக்கது.


"கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்வியை மேம்படுத்துவதில்  ஆப்கானிஸ்தான் அதிக அடைந்துள்ளது,அனால் 3.5 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்கும் வசதி இல்லாமல் உள்ளார்கள் ,அந்நாட்டில்  பள்ளிகளில் கட்டமைப்பு சீராக இல்லை"என உலக வங்கி நியமித்த ஆப்கானிஸ்தான் இயக்குனர் ஹென்றி கேரளி கூறினார். 

இந்த கூடுதல் நிதி ஆப்கானிய  அரசாங்கம் அந்நாட்டு மாணவர்களுக்கு சிறந்த கல்விகற்கும் சூழலை உருவாக்க உதவியாக இருக்கும் மேலும் குழந்தைகள் பள்ளியில் சேரவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. 


"பெண் கல்வி என்பது ஒரு  நாட்டின் புத்திசாலித்தனமான முதலீடுகளில் ஒன்றாகும்.இது பொருளாதார வளர்ச்சி  மற்றும் குழந்தை ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது" என உலக கல்வி கூட்டமைப்பின் (ஜிபிஇ) தலைமை நிர்வாக அதிகாரி அலிஸ் ஆல்ப்ரைட் கூறினார். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate