அடிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் பெர்னார்ட் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் பெர்னார்ட் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ்:-
முன்னாள் அடிடாஸ் உரிமையாளரும், முன்னாள் பிரெஞ்சு அமைச்சருமான பெர்னார்ட் டாபி மற்றும் அவரது மனைவி டொமினிக் ஆகியோர் பாரிஸுக்கு அருகிலுள்ள காம்ப்ஸ்-லா-வில்லேயில் உள்ள தங்கள் வீட்டில் தங்கியிருந்த போது நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
அவரது வீட்டிற்குள் அதிகாலை புகுந்த திருடர்கள் பெர்னார்டு மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு அடித்து, உதைத்துள்ளனர். இதில் வலி பொறுக்க முடியாமல் அவர்கள் அலறியுள்ளனர். பின்னர் இருவரையும் கயிற்றால் கட்டி போட்டுள்ளனர்.
அதன்பின் வீட்டில் இருந்த பொருட்களை அள்ளி கொண்டு சென்று விட்டனர். டாமினிக் கயிற்றில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு அண்டை வீட்டுக்கு சென்று அங்கிருந்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
லேசாக காயமடைந்து இருந்த டாமினிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படார். ஆனால், பெர்னார்டு மருத்துவ உதவி எதுவும் வேண்டாம் என கூறி மறுத்து விட்டார். கொள்ளையர்கள் திருடி சென்ற பொருட்கள் குறித்த உடனடி தகவல் இல்லை.
கொள்ளையர்கள் காவலர்களுக்கு தெரியாமல், ஜன்னல் வழியாக நுழைந்து, பின்னர் வளையல்கள், காதணிகள், மோதிரம் உள்ளிட்ட நகைகள், விலையுயர்ந்த இரண்டு ரோலக்ஸ் கடிகாரங்களை திருடி சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பெர்னார்டு தனது தொடக்க காலத்தில் வீழ்ச்சி கண்ட நிறுவனங்களை வாங்கியுள்ளார். அவர் தனது பங்குகளை அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் நிறுவனத்திற்கு விற்ற வகையில் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.