காமன் டிபியை வெளியிட்டு ராஷ்மிகா பிறந்தநாளை கொண்டாடிவரும் ரசிகர்கள்.
காமன் டிபியை வெளியிட்டு ராஷ்மிகா பிறந்தநாளை கொண்டாடிவரும் ரசிகர்கள்.
சென்னை :
கன்னடத்தில் நாயகியாக அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் உச்சம்தொட்டு தமிழிலும் காலடி வைத்து தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் என கொடிகட்டிப் பறந்து வருபவர் ராஷ்மிகா மந்தண்ணா.
கடந்த 1996 ஏப்ரல் 5ம் தேதி பிறந்த "Karnataka crush" என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா இன்று தனது 25வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது சுட்டித்தனமான அழகான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார் ராஷ்மிகா.
இதனால் குறுகிய காலத்திலேயே முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர்.
அதேபோல இன்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனும் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கல்யாணி பிறந்தநாளை அவரது ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்.