மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவு.
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவு.
மும்பை:-
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்க சிபிஐ-க்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசை சேர்ந்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர் கூறிய குற்றச்சாட்டு மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் அனில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்து தருமாறு கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக்கை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.