ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ்ராணா, டெல்லி வீரர் அக்ஷர்படேல், பெங்களூர் அணியின் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனைத்து வீரர்களும் தங்களை தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே வழி என்று நினைக்கிறேன். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று கிரிக்கெட் வாரியம் நினைத்தாலும் தற்போதைய சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என நினைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக்கத்துடன் பேசி கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு எடுக்கும்"என ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.சென்னையில் ஐ.பி.எல். போட்டியின் 10 ஆட்டங்கள் நடைபெற உள்ளதையொட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒட்டு மொத்த ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.