Just In

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்!!!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை  தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில்,  தேர்தல் ஆணையம்  அதற்கான  பணிகளில் தீவிரமாக செயல்பட்டு  வருகிறது.இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா,  தண்டனை காலம் முடிவடைந்து சமீபத்தில் விடுதலையானார். பின்  அரசியலுக்கு வருவார் என ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நேரத்தில், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்க விரும்புவதாக அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து  குல தெய்வம் கோயில் உள்ளிட்ட, பல்வேறு கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். 

தற்போது நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் சசிகலா வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் ‘வேதா இல்லம்’ இல்லத்தின் முகவரியில், சசிகலாவின் பெயர் பதிவாகி இருந்தது. தற்போது போயஸ் கார்டன் இல்லத்தை  அரசுடமை ஆக்கியதால்,  அந்த முகவரியில் இருந்த அனைவரின் பெயரும் அந்தப் பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலில்  இருந்து ஒதுங்கிய  சசிகலாவுக்கு, இப்போது  வாக்களிக்கும் வாய்ப்பும்  கிடைக்காததால்  ஆதரவாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate