இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடு, கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை உலகத்தர வாய்ந்த நாடாக எடுத்து சென்றவர்.இவரின் மகள் சந்திரா நாயுடு தனது சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம்காட்டி வந்துள்ளார். எனவே 1970களில் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட தொடங்கினர். இந்திய முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெருமையை பெற்ற இவர் அரசு கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தனது தந்தை சி.கே நாயுடுவை பற்றி புத்தகம் ஒன்றை இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
80 வயதான சந்திரா நாயுடு கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார்.இவரின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.