கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடியில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு தம்பிதுரை தனது வாக்கை பதிவு செய்தார் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் மனநிலையை நன்றாக உணர்ந்த காரணத்தினால் அதிமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.