உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக்காலம் வருகிற 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அண்மையில் கடிதம் எழுதி, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்க கோரியிருந்தார்.
அதன்படி உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கடந்த மாதம் மார்ச் 24ம் தேதி பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து இன்று, இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். அதனால், உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா வருகிற 24-ம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.