தமிழ்நாடு

ஆம்புலன்சில் வந்து வாக்குப்பதிவு !!

மதுரையை சேந்த 86 வயதான மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் ஆம்புலன்சில் வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

நேற்று சட்டப்பேரவை தேர்தல் தீவிரமாக நடந்து வந்தநிலையில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்து சென்றனர் இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலை பகுதியில் வசித்துவரும்  ராஜாமணி அம்மாள் (வயது 86).முதுமை காரணமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க விரும்பிய  அந்த மூதாட்டியை அவரது மகன் ஆம்புலன்சில் அவரை ஏற்றிக்கொண்டு ஆரப்பாளையம் தனியார் பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். உடல்நிலை குறைவிலும்  தனது ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி ராஜா மணி அம்மாளை தேர்தல் அலுவலர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து பேசிய  மூதாட்டி ராஜாமணி அம்மாள்"எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாக்களித்து வருகிறேன். எத்தனை தேர்தல்களில் வாக்களித்தேன் என்பது நினைவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் இந்த முறையும் வாக்களிக்க நினைத்தேன். டாக்டர்களின் ஆலோனைப்படி ஆம்புலன்சில் வந்து வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது" என கூறினார். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate