பியோங்யாங்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்.கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வட கொரிய வீரர்கள் 2021 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தென் கொரிய ஒலிமிக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வட கொரிய விளையாட்டு அதிகாரிகள் “கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட உலக சுகாதார நெருக்கடியிலிருந்து வீரர்களைப் பாதுகாக்கும் பொருட்டு 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் "என ட்விட்டரில் பதிவு செய்த்துள்ளார்கள்.