தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டது .இதனால் நேற்று அணைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவங்கள் திறக்கவில்லை.இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி கிராமத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று விவசாயிகள் தங்கள் நிலங்களை மாடுகளை கொண்டு உழவு பணிகளில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஓட்டு போடீர்களா? என கேட்டபோது காலையில் எழுந்து வேலை பார்த்தால் தான் வெள்ளாமையை பார்க்கமுடியும் எனவே மாலை சென்று ஓட்டு போடுவோம் என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.