இணைய வரலாற்றில் மிக நீண்ட காலமாக இயங்கிவரும் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் பக்கம் வரும் மே 4ஆம் தேதி முதல் செயல்படாது . யாஹூ ஆன்ஸ்வர்ஸ் பக்கம் யாஹூ முகப்புப் பக்கத்திற்கு திருப்பி விடப்படும் எனவே யாஹூ ஆன்ஸ்வர்ஸில் இருக்கும் தங்களது தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கோரிக்கைகளை வைக்க ஜூன் 30ஆம் தேதி தான் இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஒருவர் அளித்த தகவல்களை கோரிக்கை வைத்த 30 நாள்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி தரப்படும் என கூறப்பட்டுள்ளது.