வெலிங்டன்:
கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.இவ்வாறு செய்தால் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறிய அவர் இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.