தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதனால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது.இந்த கட்டுப்பாடுகள் வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் அமல் படுத்தப்படும்.
1. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தியேட்டர்களில் அனுமதி.
2. 100 பேர் மட்டுமே திருமண நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.
3. 50 பேர் மட்டுமே இறுதி ஊர்வலங்களில் பங்கேற்க அனுமதி.
4. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் அனுமதி.
5. 200 நபருக்கு மட்டும் கல்வி, சமுதாய மற்றும் பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில் அனுமதி
6.வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் .
7.வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணிவரை அனுமதி ஆனால் விழாக்கள் நடத்த அனுமதி இல்லை.
8.கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரம் நடத்த தடை.
9.பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
10.உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
11. ஓட்டுநர் தவிர்த்து ஆட்டோக்களில் 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.