பஞ்ச பூத கிரக இரகசியம்

Home

shadow

                                                                 புதன் --- மண் தத்துவம்

    விஞ்ஞான உண்மைகள்: சூரியனுக்கு மிக அருகில் (5.79 கோடி தொலைவு) உள்ள கிரகம் புதனாகும். புதன் கிரகத்தில் உள்ள பாறைகளில் பெரும்பாலும் இரும்பு தன்மை காணப்படுகிறது. புதனின் ஒரு பக்கம் எப்பொழுதும், பகலாகவும் மறுபக்கம் இரவாகும் இருக்கிறது. தன்னைத் தானே 59 நாட்களில் சுற்றியபடி சூரியனை ஒரு சுற்று சுற்றி வர 88 நாட்கள் ஆகிறது. புதன் கிரகத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் வாயு நிலையில் தென்படுகிறது.

மெய்ஞானப் பார்வைகள்: சூரியனை பின் தொடர்ந்து வரும் கிரகமான புதனுக்கும் தாவரங்களக்கும், நெருங்கிய தொடர்பு உண்டு. ஓரறிவு கொண்ட தாவரங்களில் உள்ள பசுங்கனிகங்கள் (CHLOROPLAST) தான் சூரிய ஒளியை சக்தியாய் (உணவாய்) மாற்றுகிறது. தாவரங்களில் காணப்படும் பச்சை நிறத்திற்கும் புதனுக்கும் சம்மந்தம் உண்டு. ஓரறிவு புல், பூண்டு தொடங்கி ஆறறிவு மனிதன் வரை அறிவு வளர்ச்சி பெற அடிப்படையாய் விளங்குவது புதனாகும். இதுவே புதனை புத்திக்காரகர் என அழைக்கக் காரணமாகும். பூமியில் உள்ள ஜீவராசிகள் புதன் கிரகத்தில் இருக்கும் (02) ஆக்ஸிஜன் நுண்ணிய வகையில் H எனப்படும் ஹைட்ரஜன் இணைந்து வளி மண்டலமும், உயிரனங்கள் வளர்ச்சிக்கும் ஆதாரமாய் (H2O) அமைந்ததால் புதனை பஞ்ச பூதத்தில் மண் பூத தத்துவத்தில் சேர்த்தனர்.

                                                              சுக்கிரன் -- நீர் தத்துவம்

         விஞ்ஞான உண்மைகள்: சூரியனுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது கிரகமான சுக்கிரன் சூரியனிலிருந்து சுமார் 10.8 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. கோள்கள் எல்லாவற்றையும் விட ஒளி மிகுந்த சுக்கிரன் சூரியன் மறைந்த பின் மேற்கு அடிவானிலும் அல்லது உதயத்திற்கு முன் கிழக்கு கீழ் வானத்திலும் வெள்ளியாக மின்னுகிறது. சந்திரனைப் போல சுக்கிரனுக்கும் வளர்பிறை தேய்பிறை உண்டு. சுக்கிரன் தன்னைத் தானே நொடிக்கு 22 கி.மீ. வேகத்தில் சுற்றியபடி சூரியனை 225 நாட்களுக்குள் சுற்றி வருகிறது. எல்லாக் கோள்களும் மேற்கிலிருந்து கிழக்கில் சுழன்றால், சுக்கிரன் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழல்கிறது. சுக்கிரனில் பெரும்பாலும் காணப்படும் வாயு கரியமிலவாயு (96%) மற்றும் 3.5 நைட்ரோஜன் மேலும் சிறிது ஆக்ஸிஜன் கார்பன் மேனாக்சைடு மற்றும் நீராவியும் உள்ளது. இதன் வெப்பநிலை 4600சி அழுத்தம் பூமியை விட 88 மடங்கு அதிகமாகும்.

மெய்ஞானப்பார்வைகள்: உயிரினங்கள் இனப்பெருக்கம் கண்டு பரிணாம வளர்ச்சியடைந்ததற்கு சுக்கிரன் தான் மூலக்காரணமாகும். சுக்கிரனால் தான் பூமியெங்கும் பிராண வாயுடைய நீர் மழையாய் பொழிந்து உயிரினங்கள் தோன்றியது. கலை, காதல், ஆசை, காமம், களத்திரம், ஆடம்பரம் மற்றும் புதுமைக்கு காரகரான சுக்கிரனில் உள்ள நைட்ரஜன் வாயு பூமியின் வளிமண்டலத்தில் 78% உள்ளது. இயல்பாகவே நுகர்ந்தால் சிரிப்பை தூண்டும் (NITROUSOXIDE) நைட்ரஜன் வாயுவை  LAUGHING GAS என ஆங்கிலத்தில் அழைப்பர். மண்ணில் வாழும் மனிதர்களின் மகிழ்ச்சிக்கும் சுக்கிரனின் காரகங்களின் சிறப்பே பிரதானமாகும். பஞ்ச பூதத்தில் மழைக்கோளான சுக்கிரன் நீர் தத்துவமாகும்.

                                                             செவ்வாய் -- நெருப்பு தத்துவம்

         விஞ்ஞான உண்மைகள்: புதனுக்கு அடுத்து அளவில் சிறிய கோளான செவ்வாய் சூரியனிலிருந்து சுமார் 22.8 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது. செவ்வாய் தன்னைத் தானே 24 மணி நேரம் 37 நிமிடத்தில் சுற்றியபடி சூரியனை 687 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாயில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக இருப்பதால் சிவப்பு நிறத்தில் தெரிகிறது. கோடைக்காலத்தில் மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் புயல் வீசுகிறது. அதன் வளிக் கோளத்தில் 25கி.மீ.வரை செந்நிற துகள்கள் பரவி உள்ளது. செங்காவி நிறமாய் தோன்றும் செவ்வாயின் நிலவுகளில் ஒன்று 7 மணி நேரத்திலும் மற்றொன்று 30மணி நேரத்திலும் செவ்வாயை சுற்றி வருகிறது. இக்கோளின் நண்பகல் வெப்பநிலை 200சி செவ்வாயின் வளி மண்டலத்தில் 95.32 கரியமில வாயுவும் மற்றும் ஆர்கான் 1.6%, நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிறிதளவும் உள்ளது. இங்கு ஜீவராசிகள் வாழ்ந்ததற்கு உண்டான ஆதாரங்கள் தென்படுகிறது.

மெய்ஞானப் பார்வைகள்: உயிரினங்களின் சக்திக்கும், ஆற்றலுக்கும் பரிணாம முன்னேற்றத்திற்கும் அடிப்படை செவ்வாயில் உள்ள ஆர்கான் வாயுவாகும். இவ்வாயு செவ்வாயில் சிறிதளவே காணப்பட்டாலும் அங்கு வீசப்படும் அசுரத்தனமாக தூசு புயலால்¢அது சுழலும் வேகத்தில் மற்ற வாயுவுடனான வேதியல் மாற்றம் தாக்கம் பூமியில் வாழும் மனிதர்களில் போர்குணம், விடாமுயற்சி, முரட்டுதனம் விவேகமில்லா வீரம் முன்கோபம் போன்ற அசுர குணங்களுக்குண்டான வலிமையை தருகிறது. கடினமான ஆர்கான் வாயு பூமியில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. செவ்வாயில் பூமியைப் போல வளிமண்டலம் மேகக் கூட்டம் மற்றும் பருவநிலை மாற்றங்களும் உள்ளது. ஆனால் பிராணவாயு மிக குறைந்த அளவில் உள்ளதால் தாவரங்கள் வளர முடியாமல் வறண்டு காணப்படுகிறது. செவ்வாய் பூமியை போலவே பலவற்றில் ஒத்திருப்பதால் சகோதரகாரகன் என்றும் மேலும் உடலுக்கு சக்தி தருவது இரத்தம் என்பதால் இரத்தக்காரகன் எனப்படுகிறார். ஆதியில் எரிமலைக் குழப்பாறு ஒடியதாலும், செவ்வண்ணமாய் இக்கோள் காணப்படுவதாலும் பஞ்ச பூத கிரகங்களில் நெருப்பை செவ்வாய் குறிக்கிறார்.

                                                                குரு -- ஆகாய தத்துவம்

        விஞ்ஞான உண்மைகள்: சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக பெரியது வியாழனாகும். வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியதாகும். சுக்கிரனுக்கு அடுத்து ஒளி வீசும் தன்மை கொண்டதாகும். வியாழன் சூரியனிலிருந்து சுமார் 77.33 கோடி கி.மீ. தொலையில் உள்ளது. வியாழன் தன்னைத்தானே 9மணி 50 நிமிடங்கள் சுற்றியபடி சூரியனை 11.9 ஆண்டுகளில் சுற்றி வருகிறது. வியாழனில் 71% ஹைட்ரஜன் 24% ஹீலியம் மற்ற வாயுக்கள் 5% உள்ளது. இதில் உள்ள வளி மண்டலம் பல்லாயிரக்கணக்கான கிமீ உயரம் வரை உள்ளது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1300சி மேலும் நீரும் உறைப்பனியும் சிறிதளவு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மெய்ஞானப் பார்வைகள்: சூரியனின் ஈர்ப்பபாற்றலால் குறிப்பிட்ட வட்ட பாதைகளில் கிரகங்கள் நின்று சூரியனின் விசைக்கேற்ப சுற்றி வருவது போல வியாழன் எனப்படும் குரு கிரகத்தின் ஈப்பாற்றலாலும் விசையினாலும் பூமியை நோக்கி வரும் பேராபத்துக்கள் தடுக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் எத்தனையோ எரி நட்சத்திரங்கள், மற்றும் எரிக்கற்கள், பாறைகள் பூமியை நோக்கி விழும் முன் குருவின் ஈர்பாற்றலால் இழுத்துக் கொள்ளப்படுகிறது. வாயுக் கோளமான குருவுக்கு தரைப்பரப்பு இல்லை. குருவில் காணப்படும் காந்த சக்தி பூமியை போல 14 மடங்கு அதிகமாகும் அதே போல தரைமட்ட அழுத்தம் புவியை விட 10 மடங்கு கூடுதலாக உள்ளது. இப்படி பூமியில் வாழும் உயிர்க்ளை காக்கும் கிரகமாக வியாழன் உள்ளதால் ஞானத்தை வழங்கும் குருவுடன் ஒப்பிடப்படுகிறார். உயிர்களுக்கு ஆத்மாவாக சூரியன் செயல்பட்டாலும் பரிணாமத்தில்  ஜீவன்கள் உயர்ந்திடவும் அடுத்த தலைமுறையை பாதுகாப்பதாலும் குருவை புத்திரக்காரகர் என்றனர். ஞான ரூபமான திருவருளை குருவருள் இன்றி அறிந்திட முடியாது ஞானத்திற்கு (இறைவன்) எல்லைகள் இல்லை. ஆகவே ஞானத்தை அடைந்திட உறுதுணையாகும் குருவை ஆகாயத்தத்துவம் என்கிறோம்.

                                                                               சனி -- காற்று தத்துவம்

        விஞ்ஞான உண்மைகள்: வியாழனுக்கு அடுத்து பெரிய கோளான சனி சூரியனிலிருந்து 142.7 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. குருவை போல சனியும் ஒரு வாயு கோளாகும். சனி தன்னைத்தானே 10 மணி 16 நிமிடத்தில் சுற்றியபடி சூரியனை ஒரு முறை சுற்றி வர 29.5 ஆண்டுகளாகிறது. இது பூமியை விட 770 மடங்கு பெரியது. சனியை சுற்றி நான்கு வட்ட வளையங்கள் காணப்படுகிறது. இது சுமார் 41,500 மைல்கள் வரை நீள்கிறது. இங்கு அடர்த்தியான மேகங்கள் உள்ளது. இதில் 94% ஹைட்ரஜன், ஹீலியம், அமோனியா, இரும்பு, சிலிக்கான் இருக்கிறது. இதன் வெப்ப நிலை-1000 சி ஆகும். சனியின் டைட்டன் என்னும் நிலவில் உள்ள வாயு மண்டலத்தில் மீத்தேன் உள்ளது. இங்குள்ள ஹைட்ரஜன்,திரவ நிலையில் உள்ளது.சனி கிரகத்தில் உள்ள நச்சு வாயு பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கு உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்க கூடும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்

மெய்ஞான உண்மைகள்:  சூரிய ஒளி எளிதில் நெருங்க முடியாத தூரரத்தில் உள்ள கிரகம் சனியாகும். மிகவும் விசித்திரமான நிலவுகளும் ஆச்சரியமூட்டும் அதிசய வளைங்களும் கொண்ட சனிக்கோள் விஞ்ஞானிகளுக்கும் புலப்படாத புதிராகும். உயிர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் அதனினுள்ள அனுபவங்களை ஆத்மா மறப்பதில்லை. இதுவே ஜென்ம வாசனையாகும். இப்பிரபஞ்சம் ஈர்ப்புவிதி கோட்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கல்லும், மண்ணும், தூசும், வாயுவும், பனிமலைகளும், எரிமலைகளும், புயல் காற்றும், துகள்களும் அடங்கிய கோள்கள் குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் ஒன்றை ஒன்று ஈர்த்தப்படி சூரியனின் விசைக்கேற்ப சுழல்கிறது. ஆனால் இக்கோள்களில் உள்ளவையின் வேதியல் மாற்றத்தால்தான் பூமியில் உயிர்கள் உற்பத்தியாகி பரிணாமத்தில் உயர்ந்துள்ளது.அதனால் சனி என்பவர் ஒருவரின் எண்ண ஓட்டத்தையும் செயலையையும் கணக்கிட்டு அதற்கு எதிர்வினையாற்றி விதிக்கு தண்டனையாக நீதிகாரகர் என போற்றப் படுகிறார் 

உண்மையில் சனி என்றால் அசுத்தம் இருட்டு என பொருள் கொண்டாலும்  பெரும்பாலமான மனிதர்களின் செயலை முன்வினைக் கொண்டு எதிர் வினை ஆற்றுவதால் அவரை முழுவதமாய் தீமை மட்டும் செய்பவர் என சொல்லிட முடியாது மொத்தத்தில் ஒருவர்  செய்யும் வினையே சனி  என கூறலாம் எல்லா கிரகமும் பூமியில் பிறக்கும் மனிதர்களின் நேரம் பொருத்து அவை அமர்ந்த இடம் பொருத்து விதியாய் செயல் ஆற்றுவார்கள்  

பஞ்சபூத கலவையான உருவமற்ற மனம் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப எண்ணங்களால் வினையாற்றுகிறது. சூரியனைப் பார்த்து பகலில் எரிந்து விழும் எண்ணங்கள், இரவில் நிலவை கண்டதும் அமைதியில் காதல் நினைவுகளில் தள்ளாடுகிறது. இதுபோல ஒவ்வொரு கிரகங்களின் தாக்கமும் முன்வினையால் எதிர் வினைக்கு வித்தாகிறது. உயிர் மூச்சுக்கு காரகரான சனிபகவான்தான் பஞ்சபூதத்தில் காற்று தத்துவமாபவர். விஞ்ஞானம் அறிந்திடாத சனிபகவானின் தாக்கம் நட்சத்திர மண்டலங்களில் கோட்சாரமாய் வரும் போது மனிதர்களின் ஜென்மநட்சத்திர இராசிக்கு பாதிப்பை விளைவிக்கிறது இது எப்படி சாத்தியமாகிறது என்பதை விரிவாக விரைவில் பார்ப்போம்.

இது தொடர்பான செய்திகள் :