பிரபஞ்ச இரகசியம்

Home

shadow


      உயிர்கள் பூமியில் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணம் நீராகும். விஞ்ஞானம் மண்ணில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் வேதியல் வினை மாற்றத்தின் கூறில் விளைந்த அற்புதம் என ஆதாரத்தை அடுக்கி வைத்த போதிலும், மெய்ஞானம் மட்டும் இவ்வுலகம் இறைவனின் படைப்பு என பிரபஞ்ச ஆற்றலை கடவுளாக வணங்குகிறது. புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி என தொடங்கும் திருவாசக வரிகளின் வாயிலாக பூமியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் தாவர இனம் என்பதை அறிய முடிகிறது.

பிரபஞ்சத்தில் பூமியை ஒத்த கோள்கள் பல சூரியனை சுற்றி வந்த போதும் உயிர்கள் வாழக்கூடிய சூழ்நிலை, தட்ப வெட்பம் பூமியில் மட்டும் தான் உள்ளது. பஞ்ச பூதத்தில் நிலம், வாயு மற்றும் நெருப்பும் கூட இதர கோள்களில் காண முடிந்தாலும் உயிர்களின் உற்பத்திக்கு தேவையான பிராண வாயு நிறைந்த நீர் (H2O) மட்டும் பூமியில் தான் இருக்கிறது. எனவே தான் உயிர்கள் பூமியில் உண்டாவதற்கு நீர் மூலக் காரணமானது.

நீரிலிருந்து தான் உயிரினங்கள் தோன்றியிருக்க முடியுமென உயிரியல் விஞ்ஞானி "டார்வின்"   தனது "பரிணாம கோட்பாட்டில்" நிரூபித்து உள்ளார். ஆனால் பல்லாயிரமாண்டுகள் முன்பே நமது முன்னோர்கள் பரிணாம வளர்ச்சியை படைப்பின் இரகசியமென தசாவதாரம் மூலம் சொல்லியிருப்பது விஞ்ஞானத்தை விஞ்சும் வியப்பான உண்மையாகும்.

ஒரறிவு முதல் ஆறறிவு வரையிலான ஜீவராசிகள் தாவரம், ஊர்வன, நீர் வாழ்வன, பட்சிகள், பாலூட்டிகள் என அனைத்தும் தோன்றியது வித்து, வியர்வை (கழிவு) முட்டை மற்றும் கருப்பை மூலமாகும் இதில் செடி, கொடி, புழு, பூச்சி, நத்தை, மீன், ஆமை, எறும்பு, , கொசு, அட்டை தும்பி பறவை, மிருகம், மனிதன் என 84 இலட்சம் யோனி பேதமுள்ள ஜீவராசிகள் பரிணாம வளர்ச்சியினால் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறொன்றாய் கால மாற்றத்தால் உண்டாகின. இதில் உச்சம் ஆறறிவு படைத்த மனித இனம்.

உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் புலன்களின் தோற்றம்

உலகில் தோன்றிய முதல் உயிரினமான தாவரங்களால் தான் வானில் வளிமண்டலம் (OZONE LAYER) பூமிக்கு மேல் உருவானது. பிராண வாயு பூமியெங்கும் நிறைந்த பின் நீர் நிலைகளில் ஒவ்வொரு ஜீவராசியாய் மெல்ல தோன்றியது. இப்படி தோன்ற ஆரம்பித்த காலத்தில் தான் புலன்கள் அறிவாகி செயல்களால் கர்ம பலன்கள் உண்டானது. ஆறறிவு ஜீவராசிகளின் புலனியக்கத்தையும் தொடர்புடைய பூதத்தையும் பார்ப்போம்.

ஒரறிவு - மெய் - உணர்தல்  = நிலம்

ஈறறிவு - மெய் + வாய் - சுவைத்தல் = நீர்

முவ்வறிவு - மெய், வாய் + மூக்கு - நுகர்தல் = காற்று

நாலறிவு - மெய், வாய், மூக்கு + கண் பார்த்தல் = நெருப்பு

ஐந்தறிவு - மெய், வாய், மூக்கு, கண் + செவி - கேட்டல் = ஆகாயம்

ஆறறிவு - மெய், வாய், மூக்கு கண், செவி+ மனம் = பஞ்சபூதம் = ஞானம் (பகுத்தறிவு)

ஆரம்ப காலத்தில் ஜீவராசிகள் உணவுக்காக மட்டுமே ஒன்றை அழித்து இன்னொன்று தன்னை தக்க வைத்து உயிர் வாழ்ந்தது. பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையை அடைந்தது. மேலும் ஒன்றின் கழிவும் இன்னொன்றுக்கு உணவானது. ஆனால் பிற்காலத்தில் இருப்பிடத்திற்காகவும், தனது பலத்தை நிரூபித்து எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காகவும் சண்டை இட்டு வலுத்தது வாழ்ந்தது. இங்கு தான் பாவ புண்ணிய கணக்கும், வினைகளுக்கு ஏற்ற எதிர் வினைகளும் விதியாகியது. இப்படி ஓரறிவில் தொடங்கி பல நிலைகளில் பரிணாமத்தில் உயர்ந்து எல்லா சூழ்நிலைகளையும் கடந்து காலத்தை அனுசரித்து இறுதியில் மனோ சக்தியுடைய ஆறறிவு ஜீவராசியாக மனிதன் பகுத்தறிவு கொண்டு உலகை ஆளப் பிறக்கிறான்.

இதை " SURVIVAL OF THE FITTEST " என்று தனது ORIGIN OF SPECIES புத்தகத்தில் டார்வின் பரிணாம வளர்ச்சியையும், மனிதனின் தோற்றத்தையும் " EVOLUTION THEORY " மூலம் விவரிக்கின்றார்.

இது தொடர்பான செய்திகள் :