ஆழ்மன அதிசயங்கள்

Home

shadow


    இச்சை (ID) - ஆள் மனம் (SUB CONSCIOUS MIND) - கனவு நிலை

    புலன் (EGO) - உணர்வுமனம் (SUB CONSCIOUS MIND) -                                                                     நினைவு      நிலை

    புத்தி (SUPER EGO) - வெளிமனம் (SUPER CONSCIOUS MIND)                                                                    விழிப்பு  நிலை

                          இச்சை- ID

          விஞ்ஞான ஆராய்ச்சி: மிருகங்களில் காணப்படும் கட்டுபாடற்ற "இச்சைகள்" நிறைந்த உணர்ச்சிகளில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது, சுய ஒழுக்கமும், சமுதாய சட்ட திட்டமுமே ஆகும், பொதுவாக குழந்தைகள் தங்களது எண்ணங்களை, எப்படியும் சாதிப்பதில் விடாப்பிடியாய், அடம் பிடிப்பதை பார்த்திருக்கலாம் இந்த குணம் தான் இச்சையின் முதல்படி இச்சைகள் மனிதர்களின் ஆள்மனப் பதிவுகளாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சில கசப்பான அனுபவத்தாலும், பாலியல் அடக்குமுறையாலும், ஆறாக்காயங்களாக மாறி மனநோய்க்கு காரணமாகிறது. என்று Dr பிராய்ட் மனநலம் பாதிப்புற்றவர்களை ஆராயும் பொழுது கண்டறிந்தார். நோயாளிகளை கனவு நிலைக்கு கொண்டு சென்று ஆள்மனை பதிவுகளை வெளிகொணர முனைந்த பொழுது இளவயதில் ஏற்பட்ட பாதிப்புகளை, அடக்கி வைக்கப்பட்ட இச்சைகளால் உண்டான குற்ற உணர்ச்சியையும், தீவிர பயத்தையும் கேட்டறிந்து தக்க ஆலோசனைகள் (COUNSELLING) மூலம் குணப்படுத்தினார். எனவே இச்சைகள் மனிதர்களின் குணாதியங்களை (CHARACTER) நிச்சயிப்பது மட்டுமின்றி வாழ்வில்  எதிர்ப்படும் எல்லா நிகழ்வுக்கும் ஆள்மனப் பதிவின் பாதிப்பே ஆரம்பப்புள்ளியாக உள்ளது என தனது ஆராய்ச்சி மூலம் நிருப்பித்தார்.

மெய்ஞான அனுபவம்: எல்லாக் குழந்தைகளும் பெற்றவர்களின் கர்மாவை வாங்கியே பூமிக்கு பிறவி எடுக்கின்றனர். மேலும் 12 வயதுக்கு (மாமாங்கம்) பிறகு தான் குழந்தையின் கர்மாவானது வேலை செய்யத் துவங்கும். ஒரு குழந்தை வளரும் சூழ்நிலையானது தாய் - தந்தையரின் மனநிலைப் பொருத்து மாறுபடுகிறது. குழந்தைகள் தங்கள் பெற்றவர்களின் குணத்தை சார்ந்து ஒத்துதான் மனவளர்ச்சிப் பெறுகின்றனர். உண்மையில் பெற்றவர்களின் இச்சைகளே பிள்ளைகளாய் பிறந்து வளர்ந்து எதிர்காலமாய் காட்சி தருகின்றனது எனலாம். இதுவே கர்ம விதியின் சூட்சுமமாகும். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இராஜா வீட்டிலும், சேவகன் குடிலிலும் இரு வேறு குழந்தைகள் பிறந்தாலும், இராஜா மகன் கட்டளையிட மட்டுமே கற்றுக் கொள்கிறான். சேவகன் பிள்ளையோ கீழ்படிதலையே ஏற்றுச் செய்கிறான். இந்த ஆழ்மனப் பதிவே பிற்காலத்தில் ஒருவன் நல்லவனாகவோ அல்லது , கெட்டவனாகவோ மாற அடித்தளம் இடுக்கின்றது. எனவே தான் அக்காலத்தில் பிள்ளைகள் வளரும் பருவத்தில் நீதி நெறிக்கதைகளை (பாட்டிக்கதைகள்) கூறி ஆழ்மனப் பதிவுகளில் இடம் பெறச் செய்து முன்னோர்கள் குழந்தைகளின் மனநலம் பேண மெய்ஞான அனுபவம் வழிவகுத்தது.

ஆகாமிய கர்மா ஆதாரம்: 'எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும்'. கோடி ரூபாயும் ஒரு நொடியில் எளிதில் யார் வேண்டுமானாலும் செலவு செய்திட முடியும். ஆனால் ஒருவரின் அறிவை எவராலும் திருட முடியாது அந்த அறிவே நாளைய சந்ததியை காக்கும். ஊரையே ஏமாற்றியவன் தன் பிள்ளையிடம் மோசம் போகிறான். பிறர் சொத்தை திருடியவன் மகன் ஊதாரியாக செலவு செய்து தெருவில் நிற்கிறான். எல்லாம் காலத்தின் கையில் உள்ளது. எனவே கர்மா என்பது பெற்றவர்கள் மூலம்  பிள்ளைகளை காக்கவோ , அழிக்கவோ காரணமாக அமைகிறது. குழந்தை பருவத்தில் வரும் தசாபுக்தி பெற்றவர்களின் பாவ-புண்ணிய கர்ம கணக்கால் தீர்மானிக்கப்பட்டு பிள்ளைகளின் ஆழ்மனப் பதிவுக்கு தகுந்த அனுபவங்களை விதியாக விதித்து "ஆகாமியகர்மா" ஆற்ற காரணமாகி பெற்றவர்களே ஆதாரமாகிறார்கள்.

             புலன்-- -EGO

விஞ்ஞான ஆராய்ச்சி: குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில் தங்கள் ஆழ்மனப் பதிவுக்கு ஏற்ப கிடைக்கும் அனுபங்களை ஐம்புலன்களால் உணர்ந்து பின் வினையாற்ற விளைகிறார்கள் நினைவு நிலையில் உள்ள செயல் மனமானது ஆழ்மன பாதிப்புகளால் உந்தப்பட்டு அதன் கட்டளைக்கு இணங்கி சமய சந்தர்பங்களில் சூழ்நிலைக்குத் தக்கவாறு வெளிப்டுத்துகிறது. மன நோயாளிகள் தங்கள்  ஆழ்மன பாதிப்புகளை பெரும்பாலும் உணர்வதில்லை எல்லோரையும் போலவே சமூகத்தில் சகஜமாய் வாழ்ந்து வந்தாலும் உள்ளுர உள்ள அதீத உணர்ச்சிகளின் தாக்கத்தால் உடல்நலம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை Dr பிராய்ட் நோயாளிகளை நினைவு நிலையிலிருந்து கனவு நிலைக்கு கொண்டு செல்லும் போது அறிய வந்தார். "நான்" EGO என்ப்படும் புலன் "தான் " உணர்வதை ஆழ்மனதோடு தொடர்புபடுத்தி சில கட்டுபாடுகளை  விதிப்பதே நோயின் தீவிரத்திற்கு காரணமென முடிவு செய்தார். அடக்குமுறைக்கு ஆழ்மனப் பதிவுகள் (இச்சைகள்) ஆளாகும் போது நோயானது மனதோடு சேர்ந்து உடலையும் (PSYCHOSOMATIC DISEASE) பாதிப்படையச் செய்கிறதென Dr பிராய்ட் கண்டறிந்தார்.

மெய்ஞான அனுபவம்: சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளே, குழந்தைகள் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்ததும் தங்கள் குணமாக வெளிப்படுத்துகிறார். இள வயதில் ஆள்மனதுள் அடக்கி வைக்கப்பட்ட பயமும்-கோபமும் வெறுப்பாக உருமாறி உடன் இருப்பவர்களிடம் காட்டத்துவங்கும். நல்லது கெட்டது அறியும் வயதுக்கு வந்திருந்தாலும் சேரும் நட்பு வட்டாரத்தின் ஆதிக்க தாக்கத்தையே குணமாக பிரதிபளிப்பார்கள். "தோளுக்கு மிஞ்சினால் தோழன்" என்ற பண்போடு பிள்ளைகளை அணுகி எல்லாக் கேள்விகளுக்கும் சரியன விடையளிக்கும் மனப்பக்குவத்துடன், பொறுமையாக பேசி பழகி இருந்து, பாதுக்காப்பான ஓர் உணர்வை வழங்கி குழந்தைகளை நண்பர்களாக வாலிப பருவத்தில் பாவிக்கும் பொழுது, பிள்ளைகளின் "தான்" (EGO) என்ற சுயத்திற்கு வீட்டில் அங்கீகாரம் கிடைத்து விட்டமையால் வெளி நட்பு வட்டாரத்தை அளவோடு வைத்துக் கொள்வார்கள். ஆறுதலைத் தேடி எங்கும் அலைய மாட்டார்கள். கூட்டு குடும்பத்தின் பலமே பிள்ளைகள் வளரும் பருவத்தில் எல்லோரும் அக்கரையாக அன்புடன் பேசுவது, மட்டுமின்றி, யாராவது ஒருவர் கண்காணிக்கும் பணியையும் சேர்ந்து செய்து வந்ததால் ஆரோக்கிய மனநிலையில் ஒழுக்க நெறிகளுடன் பிள்ளைகள் நல்லவராகவும், வல்லவராகவும் வளர முடிந்தது.

ஆகாமியகர்மா ஆதாரம்: 12 வயது வரை பெற்றவர்களின் நிழலில், பாதுக்காப்பில் வளர்ச்சி பெறும் மனமானது, பின் தன் புலனால் உணரப்பட்டு கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு தானே முடிவுகளை எடுக்க துவங்குகிறது. இந்த காலக்கட்டமே ஒருவர் "சுயமாக" கர்மாக்களைச் செய்வதும் பின்னர் தன் பலன்களை முன்வினைக்கேற்ப அனுபவிப்பதும் ஆரம்பமாகிறது. நல்லவற்றை பார்த்து பழகிய மனது நல்லவர்களோடு சேர்ந்து உலகில் உள்ள நல்லதை மட்டுமே ஆதரிக்கும். தீயவற்றை தினமும் அனுபவமாய் இளவயது முதல் பெற்றுவந்தவர்கள் உலகமே தீயவர்களின் கூடாரம் என முடிவு செய்து அதுவரை உலகம் தனக்கு தந்ததை பிறர்க்கு கொடுத்து வெறுப்பை கக்கும். தன் ஆழ்மன த்வேஷத்தை தீர்த்-துக்கொள்ளும். மனதின் செயல்பாடு என்பது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் போது, தனக்கு சாதகமாக மனதிற்கு பிடித்ததையே அங்கீகரிக்கும்.  ஆனால் அது நன்மையா தீமையா என பாராது, உதாரணமாக இரவு வெகுநேரம் தூங்காமல் விடிய விடிய கைப்பேசியில் பேசுவது உடல் நலத்திற்கு தீங்கு எனத் தெரிந்தாலும் தனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் இது என்ன ஒரு பெரிய குற்றமா? என தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும். இதுவே பின்னர் ஒரு நேரத்தில் செய்த ஆகாமிய கர்வால் உடல் நலம் பாதிப்புற்று முடியாமல் படுத்தாலும் கூட உள்ளம் மட்டும் தன் தவறை உணர்ந்து திருந்தத் தயாராக இல்லை என்பது தான் விதியாகும்.

இது தொடர்பான செய்திகள் :