கர்ம இரகசியம் விதியின் விதி (RULE OF FATE )

Home

shadow

        பிரபஞ்ச சக்தியானது ஈர்ப்பு விதி கோட்பாட்டின் (LAW OF ATTRACTION) மூலமாகத் தான் இவ்வுலகை இடைவிடாது தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. பேரண்டமான பரவெளியில் உள்ள கோடான கோடி நட்சத்திரங்களை எல்லாம் சப்தரிஷிகள் 27 கூட்டங்களாக பிரித்து, கிரகத்திற்கு மூன்றென தொகுத்து, ஒவ்வொரு நட்சத்திரமும் ஏதோவொரு கிரகத்தின் தாக்கத்தை அதிர்வலைகளாய் பூமியில் வாழும் மனிதர்களின் மேல் பிறப்பு முதல் இறப்பு வரை விதியென ஆதிக்கம் செய்வதை கண்டறிந்தனர். மேலும் பிரபஞ்ச சக்தியானது மூன்று மண்டலங்களைக் கொண்டு தான் ஒவ்வொருவரின் கர்ம வினைப் பலன்களை, ஜென்ம இரகசியங்களை விதியாக தசாபுத்தி - கோட்சாரம் மூலமாக வரையறுப்பதை உறுதி செய்தனர். உலகில் ஒரே நேரத்தில் பலர் பிறந்த போதும், அவரவர் வாழ்க்கை முறையும், விதியின் அமைப்பும் மாறுபடுவதற்கு காரணங்கள், விதியின் இயக்கமானது கால தேச வர்த்தமானத்திற்கு உட்பட்டு, பருவ கால (ருது) மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மாறுபட்டு, காலசக்ர சுழற்சியானது பட்சம், அயனம் வேறுபாட்டிற்கு ஏற்ப, அவரவர் முன் வினைப்பயனால் பஞ்ச பூதங்களால் முடிவு செய்யப்படுகிறது.

மனிதர்களை அண்டத்திலிருந்து ஆட்டிவிக்கும் பிரபஞ¢ச சக்தி சூட்சுமமாய் மனித உடலுள்ளே மூன்று மண்டலங்களாய் இயங்குவதை ஒளவையார் தனது விநாயகர் அகவலில்   மூன்று   மண்டலத்தின்  முட்டிய தூணின் எனக் குறிப்பிடுகிறார். இதே கருத்தைத் தான் ஏனைய சித்தர் பெருமக்களும் தங்கள் பாடல்களில் வலியுறுத்தி உள்ளனர். இனி கர்ம வினைப் பலன்களை விதியாக வரையறுக்கும் மூன்று மண்டல இரகசியத்தின் ஆதாரத்தை காண்போம்,

நட்சத்திர (அக்னி) மண்டலம்:விதி - சஞ்சிதகர்மா - பிறப்பு - கர்மவினைகள்

சூரிய மண்டலம்:கதி -பிராரப்த கர்மா - ஆத்மா - தசாபுத்தி

சந்திர மண்டலம்:மதி - ஆகாமிய கர்மா - மனம் - கோட்சாரம்

நட்சத்திர மண்டலம்: ஒரு மனிதன் செய்யும் அனைத்து நல்ல, கெட்ட காரியங்கள் யாவும் நட்சத்திர மண்டலத்தில் தான் கர்ம வினைத் தொகுப்பாகப் பதிவாகிறது. இப்படி பல பிறப்பில் பரிணாம தொடர்ச்சி முதல், செய்யப்பட்ட மொத்த வினைகள் தான் சஞ்சீத கர்மாவிற்கு மூலமாகவும், மீண்டும், மீண்டும், பிறக்க காரணமாகவும் அமைகிறது. இதுவே ஜென்ம வாசனையாக ஒருவரின் குணாதிசயங்களைத் தீர்மானிக்கிறது. அண்டத்தில் இருந்து தான் அனைத்தும் உருவாகி இயங்கிக் கொண்டிருப்பதால், அத்தனை உயிர்களும், ஒவ்வொரு அனுக்களும் அண்டத்தை ஆளும் நட்சத்திர மண்டலத்தின் ஆதிக்கத்தை சார்ந்தே உள்ளது.

மனித உடலில் நட்சத்திர மண்டலமான அக்னி ரூபமும் பிறப்பின் இரகசியத்தின் மர்ம முடிச்சுகளும், நெற்றிப் பொட்டான புருவமத்தியில் சுழுமுனை நாடியாக மறைந்துள்ளது. மாபெரும் சித்தர்களும், ரிஷிகளும், ஞானத்தை அடையவும், பிறப்பை அறுக்கவும், நட்சத்திர மண்டலத்தில் உள்ள வினைக் குவியலை (சஞ்சிதகர்மா) தீர்க்கவும், யோகப்பயிற்ச¤கள் மூலம் நெற்றிக் கண்ணை குருமுகமாய் திறந்து, அண்டவெளி இரகசியங்களை அறிந்து, முக்காலத்தையும் கடந்து, பிறவியில்லாப் பெருநிலையைப் பெற்றனர். சுழுமுனையை ஆங்கிலத்தில் PINEAL GLAND என்பர். வெளிநாட்டு விஞ்ஞானிகளும் இன்று நம் நாட்டு கலாச்சார, யோக சாதனைகளை வியந்து பிரமித்து, ஆராய¢ந்து வருகிறார்கள்.

விதியை பரைசாற்றும் விஞ்ஞானியரின் ஆதார விளக்கம்:

பூமியில் நிகழும் எந்தவொரு நிகழ்வையும் ஈர்ப்பு விசையால் தீர்மானிப்பது நட்சத்திரங்களாகும். பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களுக்கு முன் சூரிய குடும்பம் என்பது ஒரு புள்ளிதான். மேலும் சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதால் அண்டத்தின் தாக்கம், மண்ணில் வாழும் அணுக்குவியலை கொண்ட உயிர்களை ஆதிக்கம் செய்வது வாயு, திரவ, திட அணுமாற்ற நிலையேயாகும். ஏனெனில் பூமியின் உருவாக்கமும், உயிர்களின் பிறப்பும் அடிப்படையில் ஒன்றே என்பதால் எது பூமியின் (சூரிய வெடிப்பு) தோற்றத்திற்கு காரணமோ அதுவே உயிர்களின் பரிணாமத்துக்கும் மூலமாக அமைந்தது என விஞ்ஞானிகள் வரையறுத்தனர்.

உலகில் வாழும் மனிதர்களின் செயல்கள், எண்ணங்கள், சிறு அசைவுகள் உட்பட அனைத்தும் ஒளி, ஒலி அதிர்வுகளாக, மின்காந்த அலைகள் (ELECTRO MAGNETIC WAVES) மூலம் பிரபஞ்சத்தால் கிரகிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதுவே விதியாக செயல்படுகிறது. ஒவ்வொருவரின் உடலும் திட, திரவ வாயு நிலையில் தான் கர்மவினைகளைப் புரிகிறது. பல ஜென்மங்களில் சட்டையை மாற்றுவது போல பரிணாம வளர்ச்சியில், ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உருவம் கொண்ட உடலான திடப்பொருள் (மண்பூதம்) இயங்குவது இரத்தமான திரவத்தால் (நீர்பூதம்) ஆகும். உடல் அழிந்து மீண்டும் புதிதாய் பிறந்தபொழுதும் வாயுவான (காற்றுபூதம்) ஆத்மாவும், அதை சூட்சுமத்தில் இயக்கும் மனமும் (பஞ்சபூதம்) ஜென்ம வாசனையால் அழியாது பழைய நினைவுகளை சுமந்து, சார்ந்தே மறுபடியும் பிறவி எடுத்து தனது இச்சையை நிறைவேற்ற முயல்கிறது. இப்படி பல ஜென்மத்தில் சேர்ந்த வினைகள் (சஞ்சிதகர்மா) தான் புதிய பிறவியில் (பிராரப்த கர்மா) விதியாக அமைந்து முன் ஜென்ம தொடர்பில் உள்ளவர்களே மீண்டும் இப்பிறவியில் உறவினர்களாக, நண்பர்களாக, பகைவர்களாக வந்து இன்ப துன்பத்திற்கு காரணமாகிறார்கள். 

இது தொடர்பான செய்திகள் :