கர்ம இரகசியம் - நவகிரக தோற்றம்

Home

shadow

       

       உணவுக்காகவும், இருப்பிடத்திற்காகவும், இனச் சேர்க்கைக்காகவும் இதர ஜீவராசிகள் ஆற்றும் வினைகள் இயற்கை விதிக்குட்பட்டு  இருந்தமையால், விதி விலக்குகளுடன் அதனதன் கர்மாவுக்கு நிகரான பலன்களை அனுபவித்தது. ஆனால் சிந்திக்க தெரிந்த மனிதன் தனது மனோசக்தியின் வலிமையால் அண்ட பிரம்மாண்டத்தையும் ஆராயத் தொடங்கினான். கல்லை உரசி நெருப்பை கண்டுபிடித்து, வில்லை வளைத்து வேட்டையாடி, விலங்குகளோடு விலங்காய் திரிந்தவன், காலப்போக்கில் வாழ்ந்த காட்டையே அழித்து நாட்டை வடிவமைத்து வானையும், மண்ணையும் மட்டுமல்லாது நிலவிலும் கால் பதிக்கலானான்.

பகுத்தறிவு படைத்த மனிதனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற விபரீத ஆசையினால் எல்லாவிதமான துர் செயல்களையும் அச்சமேதுமின்றி, அதர்ம நெறியில் துச்சமெனச் செய்ய துணிந்தான். இப்படி பஞ்ச மகா பாதகங்களையும் தன் சுயநலத்திற்காக சரியென செய்தவன், ஒரு கட்டத்தில் தான் வாழ தன்னை நம்பியோரின் குடியையும், நலனையும் கெடுத்து, எதிர்த்தவரை எல்லாம் வேரோடு கொன்று குவித்து மும்மலங்களான ஆணவம், மாயை கன்மங்களால் சூழப்பட்டான்.

ஆறாவது அறிவை அழிவு சக்தியாய் பயன்படுத்தி உலகையே அவனது ஆளுமைக்குள் கொண்டு வர முற்பட்ட மனிதனை, இயற்கை தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி, பூமி சமன் நிலை அடைந்திட இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள் தான் நவகிரகங்கள், ஒருவரின் பல ஜென்ம கர்மாவை கணக்கிட்டு தசாபுத்தி மூலம் இன்ப துன்பங்களை முன்பே நிச்சயித்து வரும் கோட்சார கிரக நிலைகளில், அவரவர் விதியை எதிர் கொள்ளும் விதத்தில், எதிர் காலத்தை தீர்மானித்து நன்மை, தீமைகளை எந்த பாகுபாடுமின்றி பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு அனுபவிக்க பிறவி தருவது தான் நவகிரகங்களின் பணியாகும் இனி நவகிரகங்களைப் பற்றிய அறிவியல் உண்மைகளைக் காண்போம்.

பிரபஞ்ச இரகசியம் நவகிரகங்கள் தோற்றம்

கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளடங்கிய அண்ட வெளி அதிசயம் தான் பிரபஞ்சம். பூமி சூரியனை சுற்றி வர ஒரு வருடமாகிறது ஆனால் சூரியன் பிரபஞ்சத்தை ஒரு முறை சுற்றி வர 23 கோடி வருடங்கள் குறைந்தது ஆகிறது என்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். தன்னைத் தானே சுற்றியபடி பேரண்டத்தை வலம் வரும் சூரியன், சுமார் 450 கோடி ஆண்டுகள் முன்பு மாபெரும் நட்சத்திரமாய் பேரொளியுடன் வாயுக் கோளமாய் இருந்தது. அப்போது ஒரு நாள் திடீரென மோதி வெடிப்புக்குள்ளானது. அப்படி வெடித்ததிலிருந்து பிரிந்து சென்ற சில பகுதிகள், சிறு சிறு துண்டுகளாக மாறி, வாயு மற்றும் தூசுக்களுடன் இணைந்து ஒவ்வொருன்றும் ஒவ்வொரு வேகத்தில், வெவ்வேறு திசையில், தூரத்தில், உருண்டையாக உருப்பெற்று குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்ற ஆரம்பித்தது. முதலில் அதீத வெப்பத்துடன் இருந்தவை காலப்போக்கில் தணிந்து கோள்களென பெயர் பெற்றது.

சூரியனின் ஈர்பாற்றலுக்கு இணங்கி ஈடு கொடுக்க முடியாத சில கோள்களின் ஒரு பகுதி சிதறி துணைக்கோள்களாக மாறி பிரிந்து வந்த தாய் கோள்களை மையமாகக் கொண்டு சுற்றியது. இத்துணைக்கோள்கள் தான் நிலவுகளாகும். பூமிக்கு சந்திரன் மட்டும் தான் நிலவு. ஆனால் குருவை 67 நிலவுகள் சனியை 62 நிலவுகள் செவ்வாயை 2 நிலவுகள் துணைக்கோள்களாக சுற்றி வருகிறது. பூமியை சுற்றி வரும் சந்திரன் ஓர் இயற்கை செயற்கை கோள் (NATURAL SATELLITE) என விஞ்ஞானிகள் பெருமிதம் கொள்கின்றனர்.

விஞ்ஞான - மெய்ஞான  நவகிரகங்கள் முரண்பாடுகள்

விஞ்ஞான நவக்கோள்கள்: புதன், சுக்கிரன், செவ்வாய், பூமி, குரு, சனி, யூரேனஸ் நெப்டியூன்  மற்றும் புளுட்டோ (தற்போது புளுட்டோ கிரக அந்தஸ்தை இழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்) விஞ்ஞானம் சூரியனை நட்சத்திரமாகவும் பூமியை கோளாகவும் இராகு, கேதுவை (ASCENDING NODE -- DESCENDING NODE) சூரிய சந்திரனின் வெட்டுப் புள்ளியாக கருதுகிறது.

மெய்ஞான நவகிரகங்கள்: சூரியன், சந்திரன் (ஒளி கிரகங்கள்) புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி (பஞ்சபூத கிரகங்கள்) இராகு, கேது (சாயா கிரகங்கள்) மெய்ஞானியர், சூரியன், சந்திரன் மற்றும் இராகு கேதுவை கிரகங்களாக கணக்கில் கொள்கின்றனர். பூமியை வாழும் இடம் என்பதால் கணக்கில் கொள்ள மறுக்கின்றனர்.

சூரியனின் உள் வட்ட - வெளிவட்ட கிரகங்கள்

புதன், சுக்கிரன், சந்திரன் உள்வட்ட கிரகங்கள் செவ்வாய், குரு, சனி வெளிவட்ட கிரகங்கள் இனி நவகிரகங்களைப் பற்றிய விஞ்ஞானத்தின் அறிவியல் ஆய்வை மெய்ஞானப் பார்வையுடன் பார்ப்போம்....

இது தொடர்பான செய்திகள் :