கர்ம இரகசியம் ஜென்ம வாசனை

Home

shadow


       பஞ்ச பூதங்களே மனிதனின் சக்தியாக ஐம்புலன் மூலம் தனது எண்ணங்களை ஆசைகளாக பஞ்சபூத கிரகங்கள் வாயிலாக இராசிகளில் பிறக்கும் நேரத்தில் முன்வினைப் படி ஜாதகத்தில் அமர்கிறது. இப்பிறவியின் நோக்கத்தை அடைந்திட சூரிய சந்திரன் (கதி- மதி) துணைபுரிய தடுத்திடும் பணியை இராகு கேதுக்களும் தொடர்ந்து செய்வதால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பது தடைப்பெறுகிறது.

காலபுருஷ தத்துவப்படி கர்மாவின் இரகசியத்தை ஜென்ம வாசனைக் கொண்டு அறிய முடியும். நவகிரகங்களில் எந்த இராசியை இலக்கினமாகக் கொண்டு ஒருவர் பிறக்கிறாரோ அந்த இராசியே ஜென்ம வாசனையாகும். உதாரணமாக துலாம் இலக்கினாதிபதி சுக்கிரன் காலபுருஷனுக்கு 7ஆம் வீடு காம திரிகோணம். இராசியில் சனிபகவான் உச்சம், சூரியன் நீச்சம். இதில் பிறந்தவர் சுக்கிரனின் காரகத்துவம் அனைத்தையும் அனுபவிக்க நேர்மையான முறையில் போராடுவார். ஆத்மகாரகரான இலாபாதிபதி சூரியன் நீச்சமாகி பாதகாதிபதியாகவும் வருவதால் பிதுர் வழியில் பாவங்கள் செய்திருப்பார். சனியே 4-5ஆம் அதிபதியாக வந்து இராசியில் உச்சமாவதால் தாய் துணை உண்டு பூர்வ புண்ணிய பலமும் உண்டு. ஆனால் இலக்கினாதிபதி அமர்ந்த ஸ¢தானமே எதையும் உறுதி செய்யும்.

இதே ரிஷப சுக்கிரன் இலக்கினமானால் கால புருஷனுக்கு 2ஆம் வீடு அர்த்த திரிகோணம் இராசியில் 3ஆம் அதிபதி சந்திரன் உச்சம். இதில் பிறந்தவர் அதீத லௌகீக ஆசைகள் கொண்டிருப்பார். எல்லோரிடமும் இனிமையாக பேசி பழகி காரியம் சாதித்துக் கொள்வார். வீரியாதிபதி சந்திரன் என்பதால் காம எண்ணங்கள் சற்று அதிகமாக இருக்கும். தாயின் பலம் பாசம் அரவணைப்பு கிடைக்கும். இப்படி ஆத்மா பிறக்கும் இலக்கினம் பொருத்து ஜென்ம வாசனைகள் விதியை வலியுறுத்தும்.

விதியின் இரகசியம்: ஒரு குழந்தை ஜனனமாகும் நேரத்தில் நவகிரகங்கள் தாங்கள் அமர்ந்துள்ள நட்சத்திர மண்டல (சஞ்சிதகர்மா) ஒளி ஒலி அதிர்வுகளை மின்காந்த அலைகளால் ஆத்மாவில் (இலக்கினம்) பிராரப்த கர்மாவாக பதிவு செய்கிறது. இப்பதிவை நிலையானது என எண்ணும் ஆத்மாவானது முன்வினைப் பயனால் தசாபுத்தி மூலம் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. நட்சத்திர மண்டலம் (சஞ்சிதகர்மா) மூலம் பெறப்படும் அதிர்வலைகளை சூரிய மண்டல (பிராரப்த கர்மா) நவகிரகங்கள் ஒருவரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப தர்ம, அர்த்த, காம, மோட்ச திரிகோணங்களில் அமர்ந்து கால புருஷ தத்துவபடி விதியான இலக்கினம் மூலம் வாழ்வில் நன்மை தீமைகளை வரையறுக்க¤றார்கள். ஒருவரின் விதியை (தசாபுத்தி) தடுக்க முடியாது ஆனால் மதியால் (கோட்சாரம்) மாற்ற முடியும் அது எப்படி? அடுத்து சந்திர மண்டலத்தை ஆராய்வோம்.

கர்ம வினைத் தீர்க்கும் பரிகாரத்திருத்தலங்களில் விதி வெல்லப்பட்டு, கதியான பரம்பொருளால் அருளப்பட்டு, நவகிரக இயக்கங்கள் தடைப்பட்டு, எமனும் சம்ஹரிக்கப்பட்டு, மன்னனும் மண்டியிட்ட திருக்கடவூர் அன்னை அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயச் சிறப்புகளைக் காண்போம். ஆலயங்களில் மேற்கு நோக்கியுள்ள மூலவர் சந்நிதானம்  விதியை வெல்லும் சக்தி கொண்டதாகும் சில கோயில்களில் மட்டும்தான் இறைவன் மேற்கு பார்த்தார் போல் அமையப் பெற்றிருக்கும். ஆனால் அக்கோயில்கள்தான் பரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாகும், தலைவிதியையே மாற்றி அருள் புரியும் ஆலயங்களாகும்.

திருக்கடையூரில் சிவபெருமாள் மேற்கு நோக்கி அமர்ந்திருக்க, அன்னை அபிராமியோ நேர் எதிரே கிழக்கு பார்த்து வீற்றிருப்பது மிகவும் விஷேஷமாகும். ஈசன் தன்னை நாடி வந்த பக்தன் மார்கண்டயேருக்காக எமனையே எரித்து மார்கண்டயேருக்கு ஆயுள் என்றும் பதினாறு என காத்தருளி விதியையே மாற்றினார். அன்னையோ ஈசனுக்கு சற்றும் சளைக்காமல் தனது ஏழை பக்தன் அபிராமி பட்டரை காக்கும் பொருட்டு அமாவாசையில் பௌர்ணமி நிலவை உதிக்கச் செய்து உயிரை காத்து மன்னனை தலைகுனியச் செய்தாள். இப்படி போட்டி போட்டுக் கொண்டு அப்பனும் அம்மையும் விதியையே வென்று பக்தர்களை காத்தருளும் இத்தலத்தில் நவகிரகங்களே கிடையாது. இங்கு விதியும் வேலை செய்யாது என்பதால் எப்போழுதும் திருமணம் நடக்கும் ஒரே திருத்தலம் ஆகும். மேலும் சஷ்டியப்த பூர்த்திக்கும் பிரசித்தி பெற¢ற ஆலயம். இங்கு முருகப் பெருமான் வித்தியாசமாக வள்ளி தெய்வானையுடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். வேண்டாத கோயிலே இல்லை என்போர் வாருங்கள் ஒருமுறை வந்து அம்மை அப்பனை மனதார தொழுது பாருங்கள் விதிமாறும் வாழ்க்கை சிறக்கும்.

இது தொடர்பான செய்திகள் :