காரைக்காலில் ஸ்ரீ கால பைரவருக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது

Home

shadow

                                            காரைக்காலில்  உள்ள அருள்மிகு ஸ்ரீ  நித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீ நித்திஸ்வரர் சுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை அடுத்த நித்திஸ்வரத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ நித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீ நித்திஸ்வரர் சுவாமி ஆலயத்தில்
, புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்றிரவு, ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு யாகம் நடைபெற்றது.  மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம்சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


பின்னர் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து பின்னர் சுவாமிக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் சசெய்தனர். அதனை தொடர்ந்து பைரவர் மூர்த்திகளுக்கு முத்தங்கி அணிவித்து சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. 


அஷ்டமி பூஜைஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

இது தொடர்பான செய்திகள் :