சனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்

Home

shadow

     

         ஆயிரக்கணக்கான அதிசயதக்க கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் அறிவியல் ஆதாரத்துடன் மக்கள் நலன் கருதி பலன் அடையுமாறு உலகுக்கு தந்து வருகின்றனர். இவை அனைத்தும் எல்லோர் வாழ்விலும் அன்றாட பயன்பாட்டிலும் இருந்து வருகின்றது. ஆனால் மெய்ஞானிகளோ எதையுமே வெளிப்படையாக படைத்து வைக்கவில்லை. இங்கு எல்லாமே இரகசியம் தான். அனுபவம் கிடைத்தாலன்றி ஆண்டவனின் அருளையும் கூட உணர முடிவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு மேலான சக்தியை கடவுளென உணர்வுபூர்வமாக உள்ளுணர்வால் தன்னுள் உணர்ந்து தான் பிராத்தித்து வருகின்றனர். ஆயினும் அனைவருமே அறிந்தும் அறியாமலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் சிலபல தவறுகளை பாவமென உணர முடியாமல் ஆசையினாலோ, சுயநலத்தாலோ, பந்தப்பாசப்பற்றின் காரணமாகவோ செய்யவேச் செய்கின்றனர். இவை அனைத்தும் ஒருவரின் முன்வினைக்கேற்ப விதியாய் வினையாற்றுகிறது.

செய்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை குற்ற உணர்வு கொண்டவர்களால் அறிந்து கொள்ள முடிகிறது. அப்படி அறிய முடியாதவர்களும் உணர்ந்து திருந்தி நல்வழி நடக்கவே, சனி பகவான், "அர்த்தாஷ்டம, கண்ட, அஷ்டம, ஏழரை சனியாக கோட்சாரத்திலும், 19 வருட தசா காலமாகவும், ஒருவரின் வாழ்வில் வந்து சோதித்து, பின்னவரையே சாதிக்கவும் வைக்கிறார். இனி சனி பகவானின் காரகத்துவங்களையும் இக்காலங்களில் அவர் தரும் பலன்களையும் அதற்குரிய எளிய பரிகாரங்களையும் காண்போம்.

சனி பகவான் காரகத்துவங்கள்: நகம், முடி, சளி, பாரம் சுமக்கும் பைகள் (ஙிகிநிஷி) கழிவுகள், சோம்பல், அழுக்கு, விரக்தி, அசுத்தம், தனிமை, துர்நாற்றம் வீசும் இடங்கள், கசப்பு, மலம், மாசு, பயம், வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்கள், பீதி, சந்தேகம், அலட்சியம், அவமானம், பசியின்மை, தூக்கமின்மை, அறுவறுப்பு, அலங்கோலம், அசிங்கம், அவலட்சனம், கருப்பு, அதீத கவலை மனஅழுத்தம் (ஷிஜிஸிணிஷிஷி), குழப்பம், கால், பாதம், இருட்டு, காற்று, மூச்சு, சுவாசம், வண்டி, வாகனங்கள், டையர்கள், பிரேக் (ஙிஸிகிரிணி) இரும்பு சாமான்கள், ஆயுதங்கள் (கத்தி, அரிவாள், பிளேடு) இயந்திரங்கள், ஏழ்மை, அஜாக்கிரதை, முதுமை, ஊன்றுகோல், கவனக்குறைவு, இயலாமை, ஊனம், மனநோய், வலி, வேதனை, வறுமை, இழிவு, தீய சிந்தனைகள், வாதம், வாயுத்தொல்லை.

குறிப்பு: காரகத்துவங்கள் மூலமே வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தி, சனிபகவான் துயரங்களைத் தருவார். எனவே சனிபகவான் தசா - கோட்சாரக் காலத்தில் உடலும், மனமும் தூய்மையாய் வைத்து அனுதினமும் ஆண்டவனை நினைத்து கடமையைச் செய்தால் சனிபகவானால் பெரிய பாதிப்பு நிகழாது.

பலன்கள்

அர்த்தாஷ்டம சனி: வீடு, வண்டி வாகனங்கள் சம்மந்தமான தேவையற்ற செலவுகள், உடல் நலக்கோளாறு, சொந்த பந்தம் பகையாதல், பாகப்பிரிவினை, கல்வித்தடை, கற்பு நெறி தவறுதல், பெண்களால் அவமானங்கள், அடிபடுதல்.

கண்ட சனி: திருமணத் தடை, நிச்சயித்த திருமணம் நின்று போதல், கணவன் மனைவி பிரச்சனைகள், வெளிநாட்டு வாசம், வேலையிழப்பு, கூட்டுத் தொழிலில் நஷ்டம், ஏமாற்றப்படுதல், பணஇழப்பு.

அஷ்டம சனி: முன்வினையை அனுபவித்தல், செய்யாத தவறுக்கு தண்டனை அடைதல், மன பாதிப்பு, பண நெருக்கடி, சீட்டு கம்பனியில் பணம் போட்டு மோசம் போதல், களவு போதல், கடன்படுதல், துரோகங்களை சந்தித்தல், போலிஸ் ஸ்டேசன், கோர்ட் கேஸ் அலைச்சல், சிறைவாசம், தற்கொலை முயற்சி.

ஏழரைச் சனி: வீண் விரயங்கள், உடன் வேலை செய்பவர்களால் தொல்லைகள்,அதிக வேலை குறைந்த சம்பளம், உடல் உபாதைகள், முடக்கங்கள், இழப்புகள், காலில் அடிபடுதல், கீழே விழுதல், கெட்ட பெயர் எடுத்தல், பெண்களால் விரோதம், குடும்பத்தில் குழப்பம், சண்டை சச்சரவு, பிள்ளைகளால் கஷ்டங்கள், காரியத்தடை, வேலையிழப்பு, வியாபாரம் மற்றும்  செய்யும் தொழிலில் நஷ்டங்கள், அந்நியரால் குடும்ப நிம்மதி பறிபோதல், வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் பழுதாகுதல் (விவீஜ்மீ நிக்ஷீவீஸீபீமீக்ஷீ, ஜிக்ஷி, சிஷீனீஜீutமீக்ஷீ, திக்ஷீவீபீரீமீ, கீணீsலீவீஸீரீ விணீநீலீவீஸீமீ, ஸிமீஜீணீவீக்ஷீ)

சனி பகவான் தசா (19) காலம்: அர்த்தாஷ்டம, கண்ட, அஷ்டம, ஏழரைச்சனி காலத்தை மொத்தமாய் தசா காலமாய் வழங்குவார். சனி பகவான் தசா முதலில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், மாபெரும் உச்சத்தையும் தந்தால் தசா முடிவில் பாதாளத்தில் தள்ளி மீழா துயரத்தைத் தருவார். அதே சமயம் ஆரம்பத்தில் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தால் தசா முடிவில் நல்ல ஸ்திரமான வளர்ச்சியை ஏற்படுத்தி தருவார்.


இது தொடர்பான செய்திகள் :