சூரிய மண்டலம் பிராரப்த கர்மா

Home

shadow

       

          எண்ணம் போல் வாழ்க்கை என விதியின் தத்துவத்தை ஒரே வரியில் முன்னோர்கள் சொல்லிச் சென்றதை மிகத் தாமதாக ஆராய்ச்சி - ஆதாரத்துடன் விஞ்ஞானிகள் ஈர்ப்பு விதி கோட்பாடு (LAW OF ATTRACTION) என்று ஒன்றை விளக்கி, ஒருவரின் விதிக்கு காரணம் அவரவரின் எண்ணங்களே என ஒப்புக்கொண்டனர். மேலும் மனிதர்களின் மனமானது நட்சத்திர மண்டல அதிர்வு ஆதிக்கத்தால், ஒலி ஒளி முன்பதிவு பாதிப்புகளால், ஆட்கொள்ளப்பட்டு பூமியில் வாழும் ஒவ்வொருவரையும் தனித்தனியே ஈர்ப்பு விசையானது ஆளுமை செலுத்துகிறது என்று விதிக்கும் பிரபஞ்ச இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்தனர்.

ஈர்ப்பு விதி கோட்பாடு பற்றி Mrs RHONDA BYRNE என்பவர் ஆங்கிலத்தில் 2006 ஆம் ஆண்டு SECRET (இரகசியம்) என்ற நூலை வெளியிட்டார். அதில் ஒருவர் எவ்வாறு  தனது எண்ணங்களால், பிரபஞ்ச விசையால் ஈர்க்கப்படுகிறார் என்பதை குறித்து மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வில் நிகழும் அனைத்து சம்பவங்களும் நேர்மறை - எதிர்மறை சிந்தனை ஒட்டத்தால் தான் உண்டாகுகிறது. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் பழைய நினைவுகளின் பதிவுகளை (PERCEPTION) சார்ந்தே நாளும் வினையாற்றுகிறார்கள். ஒருவர் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் தொடர்பு உண்டு. பிரபஞ்ச விசைக்கு (விதி) ஆட்படாமல் என்ன நடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் ஒருவரால் தொடர்ந்து நேர்மறை சிந்தனையோடு செயலாற்ற முடிந்தால் நேர்மறை சிந்தனையை, செயலாக, சாதகமாக ஈர்ப்புவிதியால் மாற்ற முடியும். மேலும் இதை ஆங்கிலத்தில் LEARN TO RESPOND NOT REACT என்பர்.

அஃதாவது ஒரு மனிதனை பாம்பு கடித்துவிட்டால், தேடி பிடித்து பாம்பை கொல்வதை விட, முக்கியம் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்றுவதாகும். வாழ்வில் ஏற்படும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் ஈர்ப்பு விதி தான் காரணம் என்ற இரகசியத்தை SECRET என்ற நூல் மூலம் தெளிவுபட அறிந்துக் கொள்ளலாம். சஞ்சித கர்மாவின் இயக்கமும், பிறப்புக்கு காரணமும் நட்சத்திர மண்டல ஈர்ப்பு விசை தான் என பார்த்தோம். இனி பிராரப்த கர்மாவை அனுபவிக்க பிறவி எடுக்கும் ஆத்மாவுக்கும் சூரிய மண்டலத்துக்கும் உள்ள தொடர்பை காண்போம்.

சூரிய மண்டலம் - ஆத்ம பிரவேசம்

தாய் தந்தையர் மூலம் பெறப்படும் உடலும்- உயிரும் இயங்கக் காரணமாக இருப்பது தான் ஆத்மாவாகும் இப்பிறவியில் புவியில்  பிறக்க ஜென்ம பந்தத்தால் பெற்றவர்கள் ஒரு கர்தாவாக இருக்கலாம். ஆனால் ஆதியில் பல ஜென்மங்களுக்கு முன்பு பரிணாமத்தில் சூரியனிலிருந்து தான் உயிர்கள் உருவானது. ஆகவே தான் சூரிய பகவானை பரமாத்ம சொரூபமாக, கண் கண்ட தெய்வமாக, வணங்கி ஆத்மகாரகன் - பித்ரு காரகன் என அழைக்கின்றோம்.

கருவில் வளரும் சிசுவானது பூமியில் முதல் மூச்சு விடும் நேரந்தனை சூரியனை மையமாகக் கொண்டு இலக்கினமாய் குறிக்கப்படுகிறது. ஆத்மா என்பது காற்று ரூபத்தில் உயிர் மூச்சாய் சிவசக்தி சொரூபமாக உடலையும் உயிரையும் மனம் மூலம் இணைக்கின்றது. ஆத்மா வெளியேறுவதைத் தான் மரணமாகக் கருதுகிறோம். உயிரான சூரியனும் (கதி) உடலான சந்திரனும் (மதி) இலக்கினமான ஆத்மாவும் (விதி) ஒன்றுக்கொன்று நல்ல தொடர்புடன், அதன் அதிபதிகளும் யோக ஸ்தானத்தில் அமர்ந்து விட்டால் நிச்சயம் ஜாதகர் பூ உலகில் சாதனைகள் பல புரிந்து, தன் லட்சியத்தில் வெற்றியும்  பெறுவார்.,

மனித உயிர் பிரிந்தவுடன் உடலானது அழிக்கப்படுகிறது. ஆனால் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவானது தனது எண்ணங்களை, ஆசைகளை நிறைவேற்ற மீண்டும் பிறக்க தகுந்த உடலை தேடி அலைகிறது. ஒரே நேரத்தில் பலர் பிறந்தாலும், அது ஒரே இடமான (மருத்துவமனை) பொழுதும், முன் வினைப்படியே விதியானது செயல்படும். இது கரு உருவான நேரத்தை வைத்து மாறுபடும். மேலும் இது கரு உற்பத்திக்கு காரணமான பெற்றவர்களின் கர்மாக்களால் நிச்சயிக்கப்படும். இதுவே ஜாதகத்தில் பலன்கள் வேறுபடக் காரணமாக அமைகிறது.

முன் வினைப்படி உடல் கிடைத்த ஆத்மாவானது ஜென்ம வாசனைக்கேற்ப இச்சைகளை நிறைவேற்ற துடிக்கும். நவகிரகங்களும் ஜாதகத்தில் பிறக்கும்போது இருக்கும் ஸ்தானங்களைப் பொருத்து ஆத்மாவானது உடலின் பாவ புண்ணியங்களில் பங்கெடுக்கும். இதை தீர்மானிப்பது தசாபுத்தி ஆகும். ஜாதகத்தில் தோஷங்கள் குறையாகவும் சாபங்கள் நோயாகவும் அதீத பாவங்கள் அங்க குறைபாடுகளாகவும், மனநலமூளை வளர்ச்சியின்றியும் பிறந்திட  ஆத்மா தான் பிரவேசித்த உடலுடன் பயணிக்க காரணம் முன் வினைப் பயனாகும். இது பிறப்பின் போது நவகிரகங்களின் அமர்வை பொருத்து அமையப்பெறுகிறது.

கெட்டவர் வாழ்வதும் நல்லவர் துன்பப்படுவதும் இப்பிறப்பு குற்றமல்ல. பல ஜென்ம வினைகளை அனுபவிக்க எடுக்கப்படும் பிறவியானது தசாபுத்தி மூலம் விதியாக செயல்படும்போது கதியான கடவுளின் துணை இருந்தால் பரிகாரங்கள¢ குருகிரகம் அருளால் பலன் தரும். 

இது தொடர்பான செய்திகள் :