செஞ்சி அருகே உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ விழா

Home

shadow

                                 செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. 


இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா  நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்திற்கான அமாவாசை  ஊஞ்சல் உற்சவ விழா நேற்றிரவு 12 மணியளவில் நடைபெற்றது. இதில் அம்மன் பூக்களாலும், நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு தாலாட்டு பாடப்பட்டது. இதில் பெங்களூரு, ஆந்திரா, திருவண்ணாமலை, சென்னை, வேலூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :