சேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது

Home

shadow

சேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக  1008 பால்குட ஊர்வலம்  வெகு விமரிசையாக நடைபெற்றது 

சேலம் மாவட்டம் இரும்பாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்காட்டு முனியப்பன் கோவிலிருந்து கோமாதா பூஜையுடன் குதிரை வாகன மரியாதையுடன் காவிரி தாயை வணங்கி 1008 பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மங்கள வாத்தியம் முழங்க பால் மற்றும் தீர்த்தக்குடம் ஏந்த ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட பால்தீர்த்தங்களை கொண்டு சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதணைகள் நடைபெற்றது. முன்னதாக உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்

இது தொடர்பான செய்திகள் :