ஜாதகத்தில் கர்மவினைகளை கண்டறியும் சூட்சுமங்கள்

Home

shadow

.

     12 இராசிகளைக் கொண்ட ஜாதகத்தில் பஞ்ச பூதங்களும் அடங்கியுள்ளது. மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு பூதத் தத்துவத்தையும், ரிஷபம், கன்னி, மகரம் நில பூதத் தத்துவத்தையும் மிதுனம், துலாம், கும்பம் காற்று பூதத் தத்துவத்தையும் கடகம், விருச்சிகம், மீனம், நீர் பூதத் தத்துவத்தையும் கொண்டதாகும். ஆகாயத்தை ஓர் எல்லைக்குள் அடக்க முடியா பரவெளி பூதம் என்பதால் ஆகாயம் பொதுவாய் விடப்பட்டுள்ளது. நவக்கிரகங்களில் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஐவரும் பஞ்ச பூத ஆதிக்கத்தை உடைய கிரகங்களாகும்.

ஆத்மகாரகனான சூரியனும், உடல் மனோகாரகனான சந்திரனும் ஒளி கிரகங்களாகும். பூமியில் ஏற்படும் தட்ப வெட்ப மாற்றத்திற்கும் காலச் சக்கர சுழற்சிக்கும் சூரிய சந்திரனின் இயக்கமே காரணமாகும். இவ்விரு கிரகத்தின் ஆற்றலை குறைக்கவும், தடுக்கவும், நிறுத்தும் வலிமையும் இராகு, கேதுவுக்கு மட்டுமே உண்டு. ஆகவே தான் இராகு கேது, சாயா கிரகங்கள் என்று வழங்கப்படுகிறது. மேலும் சனி செவ்வாய்க்கு சமமான அளவு தோஷத்தை தரும் அதிகாரம் பெற்றவர்கள்.

பஞ்ச பூத இராசிகள், பஞ்ச பூத கிரகங்கள், ஒளிகிரகங்கள், சாயா கிரகங்களை பற்றி தெளிவாய் தெரிந்துக் கொண்டோம். இனி ஒருவரின் மனம், வாக்கு காயம் மூலம் செய்யும் பாவங்கள் எப்படி தோஷங்களாக சாபங்களாக உருவெடுக்கிறது என்பதை காண்போம்.

இலக்கினம், இராசி, அதன் அதிபதிகள் தர்மதிரிகோணங்களைக் குறிக்கும் நெருப்பு இராசிகளான மேஷம், சிம்மம், தனுசுவில் (1,5,9) அமையுமானால் ஜாதகரின் மனம் வாக்கு காயம் யாவும் தர்ம நீதிக்கு கட்டுப்பட்டு உண்மை நேர்மையுடன் கடமையை செய்வதிலே குறியாய் குறிக்கும்.

இலக்கினம், இராசி அதன் அதிபதிகள் அர்த்த திரிகோணங்களைக் குறிக்கும் மண் இராசிகளான ரிஷபம், கன்னி, மகரத்தில் (2,6,10) அமையுமானால் ஜாதகரின் மனம், வாக்கு, காயம்  யாவும் பொன், பொருள், வீடு, வாகனம் பற்றுக் கொண்டு பணம் சம்பாதிப்பதிலே குறியாய் இருக்கும்.

இலக்கினம், இராசி, அதன் அதிபதிகள் காம திரிகோணங்களைக் குறிக்கும் காற்று இராசிகளான மிதுனம், துலாம், கும்பத்தில் (3,7,11) அமையுமானால் ஜாதகரின் மனம், வாக்கு, காயம் யாவும் உலக ஆசையில் உழன்று பேர், புகழ், பட்டம் பதவி அதிகாரம் என சகல இச்சைகளையும் அடைவதிலே குறியாய் இருக்கும்.

இலக்கினம், இராசி, அதன் அதிபதிகள் மோட்ச திரிகோணங்களைக் குறிக்கும் நீர் இராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் (4,8,12) அமையுமானால் ஜாதகரின் மனம், வாக்கு, காயம் யாவும் ஆன்மிகம், முக்தி, கடவுள் பக்தி என வீடு பேற்றை நாடுவதிலே குறியாய் இருக்கும்.

இலக்கினம் இராசி அதன் அதிபதிகள் வெவ்வேறு திரிகோணங்களைக் குறிக்கும் இராசிகளில் அமரும் போது மனம், வாக்கு, காயம் கால மாற்றத்திற்கும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு ஒரு நிலையின்றி மாறிக் கொண்டே இருக்கும். மேலும் சரம், ஸ்திரம், உபய இராசிகளின் தன்மைக்கு ஏற்றவாறு எண்ணமும் செயலும் மனதால் இயக்கப்படும்.

இலக்கினம், இராசி அதன் அதிபதிகள் சுப, அசுப கிரக சேர்க்கை, பார்வையைப் பொருத்து தர்ம, அர்த, காம, மோட்ச திரிகோணங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. பல ஜென்ம வாசனையே இலக்கினம், இராசி அதன் அதிபதிகள் அமரும் இடங்களை முடிவு செய்கின்றது. இதன் காரணமாகவே ஒவ்வொருவரின் மனமும் தசாபுத்திக்கு தகுந்தவாறு இயக்கப்பட்டு ஆசைகளும், இலட்சியங்களும் தேவைகளும் வேறுபடுகிறது.

மனதில் தோன்றும் எண்ணம் செயலாய் உருப்பெறும் போது தடையாய் நிற்பவரை தகர்த்தெரிவதும், ஒன்றை அடைய தீர்மானித்து பயணிக்கும் போது அது இன்னொருவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ பாதிப்பைத் தருவதும், மேலும் அந்த வினைப்பயன் பாவக் கர்மாவாய் உருப்பெற்று தோஷங்களாக, சாபங்களாக வெளிப்பட்டு பாதிப்படைந்தவர்கள் சார்பாக, தண்டனைகள் பஞ்சபூத இராசிகளில் பஞ்சபூத ஒளி சாய கிரக வடிவில் தர்ம, அர்த, காம மோட்ச, திரிகோணங்களில் அஃதாவது ஜென்ம இலக்கினத்துக்கு 1,5,9-&2,6,10-&3,7,11&-4,8,12ஆம் இடங்களில் பிராரப்த கர்மாவானது விதியாய் அமைகிறது. இது ஜென்ம ஜென்மமாய் தீர்க்கப்படாததால் தொடர்கிறது. தோஷ சாப விமோட்சனம் தரும் ஆலயங்களின் சூட்சுமங்களை இனி ஆதார விளக்கத்துடன் பார்ப்போம்.

இன்றைய கர்ம வினைகளை களையும் பரிகார திருத்தலம்: ஒருவர் செய்த வினைகளை போக்கி உடனே வாழ்வில் வசந்தம் பெற வைக்கும் ஆலயங்களில் முதன்மையானது சென்னை பாரிமுனையில் உள்ள தாய் காளிகாம்பாள். காலத்தை வெல்லும் காளி அம்பாள் வடிவில் அன்னையாய் கருணைக் கடலாய் வீற்றிருந்து எல்லா கர்மவினைகளையும் தீர்க்கும் பரிகாரத் திருத்தலம். இங்கு உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அன்னை பாதத்தில் வைத்து வணங்கி மனதார அழுது அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கும் பாபங்களுக்கும் விமோட்சனம் வேண்டி விளக்கேற்றி அங்கு தரப்படும் தாயத்தை அந்த அம்பாள் முன் நின்று கட்டிக் கொண்டால் எல்லா வினைகளும் தீரும்.

பரிகாரங்கள் தொடரும்...

இது தொடர்பான செய்திகள் :