தர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

Home

shadow

தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலையில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயில் தேர்திருவிழா, கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. 

இதில் விநாயகர்,தீர்த்தகிரி ஈஸ்வரர், வடிவாம்பிகை உள்ளிட்ட மூன்று தேர்களை அலங்கரித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
இது தொடர்பான செய்திகள் :