திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Home

shadow

             புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

            முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. விஸ்வரூப தீபாராதனையுடன் தொடங்கிய வழிபாட்டை தொடர்ந்து, பக்தர்கள் புனித நீராடல் நடைபெற்றது. 

         வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.  
   
         பிரசித்திபெற்ற திருச்சி வயலூர் முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  வைகாசி விசாக திருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

இது தொடர்பான செய்திகள் :