திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் - அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம் நடைபெற்றது

Home

shadow

                                         திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம் நடைபெற்றது


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்தி, தயார்களுடன் எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  திருப்பதி ஏழுமலையான் கோயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பனம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தில் சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான  விஷ்வ சேனாதிபதியை கோயில் அர்ச்சகர்கள் ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழுங்க கொண்டு சென்றனர். அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானிங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது. இந்த அங்குரார்பணத்திற்கு சந்திரன் அதிபதியாக இருந்து சுக்லபட்ச காலத்தில் வளரும் சந்திரனை போன்று தினந்தோறும் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் தண்ணீர் நவதானியங்கள் ஊற்றி வளர்க்கப்படவுள்ளது. 


இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :