தீமை எனும் இருளை போக்கி வேண்டுவோருக்கு நன்மையை அருளும் துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

Home

shadow

                  சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் சிறப்பு பூஜையும், இசைக் கச்சேரியும் நடைபெற்றது.


சென்னை அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் நவராத்ரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


தீமை எனும் இருளை போக்கி வேண்டுவோருக்கு நன்மையை அருளும் துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 


இதனை தொடர்ந்து தேஜாஸ்ரீ, ரூபாஸ்ரீ குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதனை வணிக வளாகத்தின் மேலாளர் கல்யாணம் தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் கண்ணன் பாட்டு, ஐயப்பன் மற்றும் அம்மன் பாடல்கள் பாடப்பட்டது. 


நிகழ்ச்சியில் பேசிய வணிக வளாகத்தின் மேலாளர் கல்யாணம், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த  வின் டிவி  உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 


இந்த நவராத்ரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :