பரிகாரங்கள் பலன் தர செய்ய வேண்டியவை

Home

shadow

1. எந்த ஆலயம் சென்றாலும் எண்ணத்  தூய்மையுடன் வணங்கி வர வேண்டும். ஆலயத்துள் இறை நாமத்தை மட்டுமே சிந்திக்க வேண்டும். உச்சரிக்க வேண்டும்.

2. ஆலயங்களுள் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த ஆலயங்கள், 108 திவ்ய தேசங்கள் 51 சக்தி பீடங்கள், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள், சுயம்பு ஆலயங்கள், 6 படைவீடு, பாடல் பெற்ற ஸ்தலங்கள் மற்றும் இயற்கை சூழ்ந்த இடங்களான காடு, மலை, அருவி, ஆறு, கடல் அருகே இருக்கும் ஆலயங்களுக்கு அதீத சக்தி உண்டு.

3. பரிகாரத்திற்கென செல்லும் ஆலயம் குறைந்தது 300 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். கும்பாபிஷேகம் முறையாக நடந்திருக்க வேண்டும். குறைந்தது 3 கால பூஜைகள் நடக்க வேண்டும்.

4. ஆலயம் செல்வோர்க்கு மனம் தான் மிகவும் முக்கியம். அது தூய்மையாக அமைதியாக இருக்க வேண்டும். ஆறு கால பூஜைகளில் எதாவது ஒரு காலப் பூஜையாவது பார்த்து வருவது நன்மை பயக்கும்.

5. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்.

திண்ணிய ராகப் பெறின்" என்ற சித்தர் திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப உங்கள் வேண்டுதல்கள் தெளிவாகவும், உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். வேண்டுதல் என்பது சங்கல்பமாகும். மனதில் தோன்றும் எண்ணங்களை சங்கல்பமாய் மாற்றும் போது வேண்டுதல் நிறைவேறும்.

6. வேண்டும் போது குறைகளை கூறி முறையிடாமல் தேவைகளை மட்டுமே கேட்க வேண்டும். எதிர்மறை சிந்தனைகள் உடைய ஆட்களுடன் கோவிலுக்கு போகக் கூடாது. தேவையில்லாத கதைகளைப் பேசக் கூடாது.

7. தீராத நோய், வாழ்க்கை முழுவதும் பிறந்தது முதல் என்றும் துயரம், போராட்டம், தடைகள் மனக் கஷ்டங்கள் கவலைகள் கடன் தொல்லைகள், என அல்லல் படுவோர் உங்கள் ஊரில் உள்ள சிவன் கோவிலில் பூஜைகள் முறையாக, குறைந்தது மூன்று வேளையாவது நடக்கிறதா, விளக்கு தொடர்ந்து கற்ப கிரகத்துள் ஏற்றப்பட்டு எறிகிறதா எனப் பாருங்கள் இல்லையெனில் வசிக்கும் இடத்தை மாற்றுங்கள். முதலில் உங்கள் ஊரில் உள்ள இறைவனை வழிப்பட்டபின் தான் பரிகாரங்களுக்கு ஏற்ற ஆலயம் செல்ல வேண்டும். எந்த பரிகாரம் செய்தாலும் முடிவில் அன்னதானம் செய்ய வேண்டும். ஆலயம் சென்று வீடு திரும்பும் முன் குறைந்தப் பட்சம் எறும்புக்காவது பசியாற்றுவது தான் பாவத்தை போக்கும்.

முருகனின் அறுபடை வீடுகளும் ஆறாதார இயக்க சக்தியாகும். இதில்  பழநி மலைதான் கர்ம வினை தீர்த்து ஞானத்தை அருளும் வீடாகும். ஜாதகத்தில் இருக்கும் கர்ம தோஷங்களை போக்க, மனந்தூய்ந்து ஜென்ம நட்சத்திர தினத்தில் அல்லது பௌர்ணமி நாட்களில் பழநி ஆண்டவரை சென்று தரிசிப்பதன் மூலம் விதிமாறும். வாழ்வு நலம் பெறும். பழநி மலையைச் சுற்றி எண்ணற்ற சித்தர்களின் வருகைதான் இங்கு நிறைந்துள்ள அதீத சக்திக்கு காரணம். பழநி ஆண்டவரை தரிசிக்கும் முன் குழந்தை முருகனை தரிசித்து, பின் அடிவாரத்தில் உள்ள விநாயகரை வணங்கி  விட்டு புலிப்பாணி ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்தபின் மேலே உள்ள போகர் ஜீவசமாதியையும் முருகனையும் தரிசித்து வர எத்தனை பெரிய தடைகளும் கர்ம வினைகளும் கூட மாறி வாழ்வு சிறக்கும் இன்பம் நிலைக்கும்.

இது தொடர்பான செய்திகள் :