பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் நவராத்திரி விழா - காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

Home

shadow

                       பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.      


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  


மலைக்கோயிலில் உச்சிக்காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  


தொடர்ந்து  மூலஸ்தானத்தில் உள்ள விநாயகர், மூலவர், தனி மண்டபத்தில் உள்ள  உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் ஆகியோருக்கு காப்புக்கட்டப்பட்டது.  


பின்னர் பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனத்துக்கும், நவவீரர்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டது.  


தொடர்ந்து மலைக்கோயில் அருள்மிகு போகர் சன்னதியில் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் புறப்பாடாகி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்துக்கு எழுந்தருளினார்.  


மலைக்கோயிலில் வரும் 18ம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், 19ம் அம்புவில் போடுதலும் நடைபெறுகிறது.   


காப்புக்கட்டு நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  


நவராத்திரி விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி வரை பதினோரு நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :