இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்

Home

shadow

                              இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தடைந்தார்பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்த  ராஜபக்சே பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கார் மூலமாக திருமலைக்குச் சென்றார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை  திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வி..பி. தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள்  ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி வேத  ஆசீர்வாதம் செய்து வைத்தனர்கோவிலுக்கு வெளியே  செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றதாகவும், கோவிலுக்கு வந்த இடத்தில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :