காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டு

Home

shadow


        தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்ற விவகாரத்தின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு லண்டனில் தங்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னர், நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், இதனை மறுத்துள்ள ஜேட்லி, தன்னை சந்திக்க மல்லையாவுக்கு அனுமதி கொடுத்தது இல்லை எனவும், மல்லையா தன்னிடம் நாடாளுமன்ற வளாகத்தில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடனை திருப்பிக் கொடுப்பது தொடர்பாக வங்கிகளை அணுகுமாறு தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜேட்லி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் விமானத்தில் தடுத்து நிறுத்தும் நோட்டீஸை, தகவல் தெரிவிக்கும் நோட்டீஸாக சிபிஐ மாற்றியதால்தான் விஜய் மல்லையா எளிதாக தப்பிச் சென்றுவிட்டதாகவும், ஒரு முக்கிய நபரின் சர்ச்சைக்குரிய வழக்கில், பிரதமரின் அனுமதியில்லாமல், லுக் அவுட் நோட்டீஸை சிபிஐ மாற்றியிருக்கும் என்பது ஏற்று கொள்ள முடியாது எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :