சாரதா சிட்பண்டு மோசடி கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார்

Home

shadow

                சாரதா சிட்பண்டு மோசடி தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்காக 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார்.

சாரதா சிட்பண்டு மோசடி தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம், கிழக்கு பிராந்திய இணை இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா தலைமையில் 3 மூத்த சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரத்துக்கும் மேலாக தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், 2வது நாளாக விசாரணைக்காக ஷில்லாங்கில், சிபிஐ அதிகாரிகள் முன் ராஜீவ் குமாரும், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குணால் கோஷும் ஆஜராகினர். இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :