பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

Home

shadow


        காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை ஒட்டிய கிருஷ்ணா காதி எனும் இடத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதேபோல் ஹந்த்வாரா பகுதியில் உள்ள ஷர்த்குண்ட் பாலா எனும் இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. துப்பாக்கிச் சண்டையை தொடர்ந்து அப்பகுதியில் இண்டெர்நெட் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :