உத்தரப்பிரதேசம் மற்றம் உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது

Home

shadow

                  உத்தரப்பிரதேசம் மற்றம் உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சகரன்பூர் மாவட்டத்தில் 36 பேரும், குஷி நகரில் 8 பேரும், உத்தரகாண்டில் 28 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், முதலில் உத்திரகாண்ட்டை சேர்ந்தவர்கள்தான் இந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாகவும், சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தினர் சிலர், அண்டை மாநிலமான உத்திரகாண்டுக்குகு இறுதிசடங்கில் கலந்து கொள்ள சென்றபோது அவர்களும் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். பின்னர் தங்கள் கிராமத்திற்கு கடத்தி வந்து, விற்றுள்ளனர்.. முற்றிலும் தடை செய்யப்பட்ட இந்த கள்ளச்சாராயம் பீகாரில் காய்ச்சப்பட்டு, கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்  என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :