உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி, 20 பேர் படுகாயம்

Home

shadow

        உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி, 20 பேர் படுகாயம்

        உத்திரப்பிரதேசத்தில், பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர்.

         உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு மாநில அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இரண்டு அடுக்கு கொண்ட இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

          யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி இரண்டு பாலத்தின் நடுவில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

பேருந்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :