கொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்

Home

shadow


கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை டுவிட்டர் மூலம் அளித்திருந்த விளக்கத்தை, ரீ-டுவிட் செய்துள்ள பிரதமர் மோடி, கொரனோ அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தபட்ட மருத்துவ இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு காற்றோட்டமான அறை தேவை என்றும் தனி கழிவறை வசதி இருப்பது நல்லது என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவேளை, வேறு யாராவது உடன் தங்க நேர்ந்தால், 2 மீட்டர் தூரம் வரை தள்ளி இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

குறிப்பாக வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால், தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ இல்லங்களுக்கு அருகே இல்லாமல், தள்ளி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான செய்திகள் :