சர்வதேச அளவில் பசுமை நிலப்பரப்புகளை உருவாக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் சீனா முன்னிலை

Home

shadow

                         சர்வதேச அளவில் பசுமை நிலப்பரப்புகளை உருவாக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் சீனா முன்னிலையில் உள்ளதாக நாசா ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நாசா செயற்கைகோள்கள் எடுத்த புகைப்படத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் பசுமை நிலப்பரப்புகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது, இந்த ஆய்வின் முடிவில் சர்வதேச அளவில், பசுமை நிலப்பரப்புகளை உருவாக்கும் முயற்சியில், இந்தியா மற்றும் சீனா முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 9 சதவீதம் நிலபரப்புகள் மட்டுமே பசுமை நிலப்பரப்புகளாக உள்ளதாகவும், இதில் 3-இல் ஒரு பகுதி இந்தியா மற்றும் சீனாவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை பொறுத்த வரை 42 சதவீதம் வனப்பகுதி எனவும், 32 சதவீதம் விவசாய நிலமாகும். அதே நேரம் இந்தியாவில் 82 சதவீதம் விளைநிலங்களாகவும், 4 புள்ளி 4 சதவீதம் மட்டுமே வனப்பகுதிகளாகவும் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :