சாரதா நிதி மோசடி வழக்கு தொடர்பாக ராஜீவ்குமார் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆஜராகிறார்

Home

shadow

                         சாரதா நிதி மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆஜராகிறார்.


மேற்கு வங்கத்தில், ரோஸ்வேலி, சாரதா ஆகிய நிதி நிறுவனங்கள் மற்றும் சிட்பண்ட் நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று, திருப்பி தராமல் மோசடி செய்த வழக்குகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. 
இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம், விசாரணை நடத்த சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் குதித்தார். இதனை அடுத்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் மேகாலாயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் இரண்டு முறை ஆஜரான நிலையில் இன்று மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகிறார்.

இது தொடர்பான செய்திகள் :