டெல்லி மக்களவைத் தேர்தல் - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Home

shadow

டெல்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மியுடன் கூட்டணி தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் 6-ஆம் கட்டமாக மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டெல்லியில், காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்தது. ஆனால் இதில் சுமூக தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில் டெல்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன் படி, டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக் ஷித், காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கான் உட்பட 6 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :